பக்கம்:குற்றால வளம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை.

நல்ல தமிழுக்கு நவ சக்தியும், ஊழியனும் என்பர். புலவர் மணிகளான திரு. வி. க., ராய. சொக்கலிங்கனார் ஆகிய இருவரும் தமிழருக்குச் செந்தமிழால் தொண்டு செய்த செம்மொழிச் செல்வர். ராய. சொ வின் உள்ளம் திருக்குறளிலும், திருவாசகத்திலும் ஊறிப் பண்பட்ட தமிழ் உள்ளம். தமிழுணர்ச்சியும், நாட்டுணர்ச்சியும் அந்த உள்ளத் துடிப்புகளாகும். இரண்டையும் "குற்றால வளம்” என்னும் இக் கட்டுரைத் தொகுதியிற் காணலாம்.


இந்நூல், சம்பந்தப் பெருமான் பாடிய பெருந்தண் சாரல் வளஞ்செய்யும் குற்றாலக் காட்சியை அழகிய சொல்லோவியமாக நம் முன் காட்டுகிறது. அதைத் தொடர்ந்து சிந்தனை அருவி உலகவாழ்வின் பல்வேறு துறைகளை வளஞ்செய்து செல்கிறது. இந்நூலை வாழ்க்கை வளம் என்றே சொல்லலாம். தெய்வத்தன்மை, உலகியல்பு, நல்லன நாடல், கல்வியும் அறிவும், நிலையில்லா வாழ்வு, அடக்கம், அழுக்காறாமை, நல்லொழுக்கம், அஞ்சாமை, வகுப்பு, ஒருமையுணர்ச்சி, தீண்டாமை ஒழிப்பு, சாதி மாயத்தின் தீமை, மடமைச் செருக்கு முதலிய பல அரிய பொருள்களை இந்நூல் விளக்குகிறது. மலையருவியில் தொடங்கிய கட்டுரை மலைநாட்டில் முடிகிறது. இந்நூல் திருக்குறளை அளவு கோலாகக் கொண்டு, உலக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/7&oldid=1534939" இலிருந்து மீள்விக்கப்பட்டது