பக்கம்:குற்றால வளம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

65


மறம்புரியத் தூண்டுவது அஞ்சாமை என்று கூறிவிட முடியாது. அவனுடைய தீய உளம் தூண்டுகிறது. தீயஉளத்தன் அஞ்சாமை பெற்றிருப்பானானால் அஞ்சாது மறஞ் செய்வான். நல்லுளத்தன் அஞ்சாமை பெற்றிருப்பானானால் அஞ்சாது அறஞ் செய்வான். எனவே, இவ்வஞ்சாமை எவன் பால் அணுகினும் அவன் செயல் வளரும். ஆதலின் அஞ்சாமை பெறாதிருப்பானானால் அவன் உளம் தீயதாயினும் அஞ்சி அத் தீமை புரியா தொழிவான் என்பது கொண்டு அஞ்சாமை தள்ளத் தக்கது என்று கூறுதல் தவறு. உளம் எவனுக்கும் தீயதாக விருத்தல் ஆகாது. உளம் அவ்வாறிருக்குமானால் செயல் எப்பொழுதேனும் வந்துவிடும். அவ் உளத்தைப் போக்க முயல வேண்டும். அது வேறு பொருள். தீய உளம் பெற்றவன் ஒருவனும் இவ்வுலகில் இருத்தல் ஆகாதென்ப தன்றோ பெரியோர் கொள்கை.


எல்லோரும் நன்மனம் பெற்றிருத்தல் வேண்டும். அவர் அஞ்சாமையை அணியாகப் பூண்டிருத்தல் வேண்டும். நல்லவர் பலர் இவ்வுலகில் அச்சத்தால் பீடிக்கப்பட்டுக் கடன் மறந்து கிடக்கிறார். அவருள் அறிஞரும் பல்லோர் இருக்கக் காண்கின்றோம். உலகப் பொருள்களையும் உலகப் போக்கையும் நன்றாக் அறிந்திருக்கின்றார்; தாம் செய்யவேண்டிய கடமையையும் உணர்ந்திருக்கின்றார். ஆனால் மனத்தொடு பெருந்தத் தாங் கொண்டிருக்கும் உண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/74&oldid=1310283" இலிருந்து மீள்விக்கப்பட்டது