பக்கம்:குற்றால வளம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

ஒழுக்கம்



ஒழுக்கம்

ஒழுக்கம் என்பதற்கு ஒழுகுதல், அதாவது நடத்தல் என்பது பொருள். ஒழுக்கம் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என இருவகைப் படும். நல்வழியில் ஒழுகுதல் நல்லொழுக்கம்; தீவழியில் ஒழுகுதல் தீயொழுக்கம். நல்லொழுக்கம் கொள்ளத்தக்கது; தீயொழுக்கம் தள்ளத் தக்கது. ஒழுக்கம் என்ற சொல் இரண்டொழுக்கத்திற்கும் பொதுச் சொல்லே. எனினும் சிறப்பாக ஒழுக்கம் என்னும் மொழி நல்லொழுக்கத்தையே குறிக்கின்றது. ஒழுக்கமுடையவன் என்று நல்லொழுக்கமுடையானைக் கூறுவது மரபாக விருக்கின்றதன்றித் தீயொழுக்கமுடையானைக் கூறக் காண்கின்றோமில்லை. இது பண்டைக் காலந்தொட்ட ஒர் மரபு. பண்டுதொட்டு நல்லொழுக்கத்தையே ஒழுக்கமென்று நூல்கள் நுவலும். திருக்குறளில் ஒழுக்கமென்ற சொல் நல்லொழுக்கத்கத்தையே குறித்துப் பயின்று வருகின்றது. “ஒழுக்கமுடைமை' என்னும் அதிகாரத்தின் பத்துப் பாக்களில் ஒன்பது பாக்கள், நல்லொழுக்கத்தை ஒழுக்கமென்ற பொதுச் சொல்லாலேயே புகல்கின்றது. ஒரு பாவில் மட்டும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்ற இரண்டு சொற்களும் பெய்யப்பட்டிருக்கின்றன. அதிகாரத்தின் பெயரும் ஒழுக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/81&oldid=1310324" இலிருந்து மீள்விக்கப்பட்டது