பக்கம்:குற்றால வளம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

ஒழுக்கம்

 டுக் கண்ட உண்மை. ஒழுக்கமிலாரை உலகம் மதிக்காது. மக்கள் பிற எந்நலனை யடைந் தருந்தபோதினும் ஒழுக்க நலன் பெறாவிட்டால் அவர்கள் உயர்ந்தோரால் மதிக்கப்பெற மாட்டார்கள். எல்லா அறத்தையும் செவ்விதின் நாடாத்திச்செல்லக் காரணமாகிய ஒழுக்க அறம்பற்றாதார் ஆற்றும் பிற செயல்கள்யாவும் வீணேயாகும். ஒழுக்கமில்லார் அறங்களை நிலை பொறுத்துதல் அரிது. "நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பைதரும்" என்றார் திருவள்ளுவர். "நல்லொழுக்கமாக ஒழுகிச் செல்தல், அறம் என்ற பயிருக்கு இடும் வித்து; தீயொழுக்கம் என்றும் துன்பத்தைத் தரும்" என்பது இப் பாவின் நேர் பொருள். மறைமுகமாக இப் பாட்டுப் பல கருத்துக்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கின்றது. நல்லொழுக்கம் அறத்திற்கு வித்தாகுமென்றால் தீயொழுக்கம் மறத்திற்கு வித்தாகு மென்பதும், தீ யொழுக்கம் என்றும் துன்பக்தருமென்றால் நல்லொழுக்கம் என்றும் இன்பந்தருமென்பதும் நன்கு அறியக் கிடக்கின்றதன்றோ? மேலும் "தீயொழுக்கம் என்றும் துன்பந்தரும், ஒருநாளும் அது இன்பம் தராது. நல்லொழுக்கம் என்றும் இன்பந்தரும்; அது துன்பமே தராது.” என்றும் இக்குறட்பாவில் கொள்ளக்கிடக்கின்றது.


ஒழுக்கமிலானுக்கு உயர்வில்லை யென்ற உண்மையை "அழுக்காறுடையான்கண் ஆக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/83&oldid=1314534" இலிருந்து மீள்விக்கப்பட்டது