பக்கம்:குற்றால வளம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

77

 பொருளை விடுத்து வேறு பொருளில் புகுந்து விட்டதாக எவரும் கருத வேண்டுவதின்று. ஒழுக்கத்திற்கு உயர்வு கூறவந்த புலவர் பெருமான் அழுக்காற்றுக்கு ஆக்கமில்லையென்று சான்று காட்டி அதை மெய்ப்பித்ததற்காக இத்துணை கூறப்பட்டது. அன்றியும் ஒழுக்க முடைமைக்கு அழுக்காறாமை இன்றியமை யாததாதலின் அதுகொண்டும் அழுக்காறாமை ஈண்டுக் கூறும் நேர்மை வாய்ந்ததேயாகும்.


இதுபோலவே ஒழுக்கமிலாரும் பிற கருதிச் சில பலரால் மதிக்கப் படுகின்றனரேயென்ற வினாவும் எழலாம். இதற்கும் முற்கூறிய கொள்கை ஒர் சமாதானமாகும். அன்றி ஒழுக்கமிலார் உயர்ந்தோரால் ஒரு நாளும் மதிக்கப்பட மாட்டாரென்பதுறுதி. "ஒழுக்கத் தினெய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப்பழி" என்றவாறு ஒழுக்கத்திற்கே மேன்மையும் இழுக்கத்திற்கே பெரும்பழியும் இயல்பு. மக்கள் கொள்ளவேண்டியவற்றுள் எல்லாம் தலையாயது ஒழுக்கம். ஒழுக்கமின்றிய வாழ்வு பிணவாழ்வேயாகும். குலத்தினால், உயர்வு தாழ்வு கூறுதல் அறியாமை, ஒழுக்கக்தினால் உயர்வு உண்டேயன்றிப் பிறப்பினால் உயர்வு இல்லை. "ஒழுக்கமுடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்" என்பது குறள். "சால ஒழுக்கம் உயர்குலத்தினன்று” என்றார் பிறரும்: "பரிந்தோம்பிக்காக்க ஒழுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/86&oldid=1315809" இலிருந்து மீள்விக்கப்பட்டது