பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


வந்தவர் எல்லோரும் தாங்கள் முன்பு நின்று கொண்டிருந்த வட்டத்தை நோக்கி, ஒடி இடம் பிடிக்க முயற்சிப்பார்கள்.

என்னுடன் வா என்று அழைத்துக் கொண்டு வந்தவரும், அவர்களுடன் ஒடி ஒரு வட்டத்திற்குள் நின்று கொள்ள, முயற்சிப்பார்.

இந்த இடம் பிடிக்கும் போட்டியில், வட்டம் கிடைக்காதவர், முன்னர் கூறி அழைத்தது போல, என்னுடன் வா என்று, அழைக்க, மீண்டும் ஆட்டம் தொடரும்.

4.4. பிடித்தால் அடிக்கலாம் (Pagalwala)

இந்த ஆட்டத்தில் விளையாட வந்திருக்கும் எல்லா ஆட்டக்காரர்களுமே கலந்து கொள்ளலாம்.

டென்னிஸ் பந்து ஒன்று ஆட்டத்திற்கு வேண்டும். அதை உயரத்தில் எறிந்து ஆசிரியர் ஆட்டத்தை ஆரம்பித்து வைக்கிறாள்.

குழந்தைகள் எல்லோருமே அந்தப் பந்தைப் பிடிக்க முயல வேண்டும்.

பந்தைப் பிடித்து விடுகிற ஒருவர், பந்தைப் பிடித்ததும், அந்தப் பந்தால் மற்றவர்களை அடிக்க முயல்வார்.

பந்தை ஒருவர் பிடித்தவுடன், மற்றவர்கள் எல்லோரும், தப்பித்துக்கொள்ள, தூரமாக ஓடிவிட முயல வேண்டும்.