இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
214
டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா
15. ஓய்வு (Relax)
ஒரு குறிப்பிட்ட உறுப்பினை, பயிற்சியின் போது முன்புறமாகவோ, பின்புறமோ, அழுத்தித் தள்ளி (press) மூச்சினைப் பிடித்து நின்றதற்குப் பிறகு அவ்வுறுப்பினை ஆசுவாசப்படுத்தி, முன்பு இருந்த இயல்பான நிலைக்குக் கொண்டு வந்து இளைப்பாறி இருத்தலையே (Relax) ஒய்வு பெறு என்கிறோம்.
அதற்காக உடலில் தொய்வோ, கால்களில் மடிப்போ, இடுப்பில் சாய்வோ இருக்கக்கூடாது.
நிமிர்ந்து நிற்பது போலவே, குறிப்பிட்ட உறுப்பினை மட்டுமே இளைப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
16. முதல் எண்ணிக்கைப் போல நில் (Same as I)
இயல்பாக நிற்றல், விறைப்பாக நிமிர்ந்து நிற்றல் என்பவை சில சமயங்களில் இதற்கு ஏற்றதாக இருந்தாலும், பயிற்சியின் தொடக்கத்தின் போது, முதல் எண்ணிக்கையில்