பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

7


முறையாக உரிய ஆசிரியர்களின் மூலமாக கற்பித்து ஆர்வத்தைத் தூண்டவேண்டும். படிப்படியாக உரிய பயிற்சிகளை அதிகப்படுத்தி சிறுவர்களின் விளையாட்டுத்திறனை அதிகப்படுத்தி அவர்களைப் போட்டிகளில் பங்கு பெற செய்யவேண்டும்.

முறையான பயிற்சியும், முனைப்பான தொடர் நடவடிக்கையும் மேற் கொண்டு இளம் தலைமுறையினருக்கு பயிற்சி அளித்தால், வெற்றிப் பதக்கம் கனவு உண்மையாகும்.

முதல் நடவடிக்கையாக, சிறுவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். அந்த முயற்சிக்கு பெரும் துணைபுரிய இந்நூல் உதவும் என்பது எங்களின் அசைக்கக முடியாத நம்பிக்கை.

1988, 1993 ஆண்டுகளில் வெளிவந்து தற்போது அடுத்த பதிப்பாக தற்போது மீண்டும் வெளியிடுவதில் மிகவும் மகிழ்கிறோம்.

விளையாட்டுத்துறை நூல்களையே வெளியிட்டு வரும் எங்கள் பதிப்பகத்தின் நூல்களை வாங்கி ஆதரவு தரும் அனைவருக்கும் எங்கள் நன்றி.


தங்கள் அன்புள்ள

31.12.2008 ஆர் ஆடம் சாக்ரட்டீஸ்

பதிப்பாளர்