பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமகிருஷ்ன பரமஹம்சர்

இராமகிருஷ்ண பரமஹம்சர்


பேரரசின் ஆட்சிக்கு உட்படுத்தினார். இராசேந்திரன் வடக்கில் வேங்கி, கலிங்கம் முதலிய நாடுகளை வென்று அடக்கினார். அதற்கு மேலும் வடக்கே சென்று கங்கைக் கரை நாடுகள் சிலவற்றை வென்று தம் வீரத்தை நிலைநாட்டினார். அதனால் இவர் 'கங்கைகொண்ட சோழன்' என்ற வீரப் பெயர் பெற்றார். இப்பெரும் வெற்றியின் சின்னமாக அழகிய நகரம் ஒன்றைப் புதிதாக அமைத்தார். இந்நகரத்தின் பெயர் கங்கைகொண்ட சோழபுரம். இவ்வூரையே இவர் தம் தலைநகராகவும் கொண்டார். தம் தந்தையைப் போலவே இராசேந்திரனும் இவ்வூரில் எழில் மிக்க கோயில் ஒன்றை எழுப்பினார். இக்கோயி லுக்கு இராசேந்திர சோழீச்சுரம் என்று பெயர். சிற்பக் கலையின் அழகெல்லாம் இதன் அமைப்பில் பொருந்தியிருப்பதை இன்றும் காணலாம். இவருடைய கலைப் பணிக்கும் கடவுள் பக்திக்கும் அழியாத சின்னமாக இக்கோயில் விளங்குகின்றது. இராசேந்திர சோழனிடம் பெரிய கப்பற் படை ஒன்று இருந்தது. கிழக்கில் கடலுக்கப்பால் மலேயா, சுமத்ரா, ஜாவா, பாலி, போர்னியேர் ஆகிய தீவு களில் ஸ்ரீ விஜயப் பேரரசு செழித்து ஓங்கி இருந்தது. இராசேந்திர சோழன் தம் கப்பற் படையின் உதவியால் அந்த நாட் டைத் தாக்கி அதன் துறைமுகப்பட்டின மான கடாரத்தை வென்றார். பிறகு அந் நாட்டு மன்னனுடன் சமாதானம் செய்து கொண்டு அந்நாட்டை அவனுக்கே திருப் பிக் கொடுத்தார்.

இராசேந்திர சோழனின் ஆட்சியின் இறுதியில் வேங்கி நாட்டுடன் மீண்டும் ஒரு போர் மூண்டது. அதில் வெற்றி காணுமுன் இவர் உயிர் துறந்தார். இப் போரை இவருடைய மகன் முதலாம் இராசாதிராசன் வென்று முடித்தார், இராசேந்திரன் சோழப் பேரரசின் செல் வாக்கை வட இந்தியாவிலும், கடலுக்கப் பாலும் நிலைநாட்டினார். இவர் காலத்தில் தமிழ்நாட்டுக்கும் சீனாவுக்கும் இடையே கடல் வாணிகம் செழித்து வளர்ந்தது. இராமகிருஷ்ண பரமஹம்சர் (1836 1886) : இந்தியாவில் பெரிய ஞானிகள் பலர் தோன்றியுள்ளனர். அவர்களுள் ஒருவர் இராமகிருஷ்ண பரமஹம்சர். இவர் வங்காளத்தில் கமார்புக் கூர் என்ற ஊரில் பிறந்தார். இளமையில் இவருக்குக் கல்வியில் நாட்டமேயில்லை. தம் 19ஆம் வயதில் இவர் தட்சிணேசுரம் என்ற இடத்திலுள்ள ஒரு காளிகோயிலுக் குப் பூசாரியானார். எப்போதும் இவர் கடவுளைப் பற்றியே எண்ணிக்கொண் டிருப்பார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் கதாதர் என்பது. தம் பக்தியினால் தேவியின் காட்சியைப் பெற்றுக் கடவுளை உணர்ந்த பிறகு இவர் இராமகிருஷ்ண பரம்ஹம்சர் என்று பெயர் பெற்றார்.

இராமகிருஷ்ணர் சாரதாமணி தேவி யாரைத் (த.க.) தம் 23ஆம் வயதில் மணந்தார். அவ்வம்மையாருக்கு அப்போது வயது ஐந்துதான். இல்லற வாழ்க் கையில் ஈடுபாடின்றி இவ்விருவரும் துறவி களாகவே வாழ்ந்து வந்தனர். இராமகிருஷ்ணருடைய பெருமையைக் கேள்வியுற்றுப் பலர் இவருக்குச் சீடரா யினர். அவர்களுள் ஒருவர் நரேந்திரநாத் தத். இராமகிருஷ்ணரிடம் ஞான ஒளியைப் பெற்றபின் இவருக்கு விவேகா நந்தர் ( த.க.) என்ற பெயர் வழங்க லாயிற்று. இராமகிருஷ்ணரின் பெருமையையும் உபதேசங்களையும் உலகெங்கும் பரப்பியவர் இவரே.

தம் தவத்தின் பயனாய்த் தாம் கண்ட உண்மைகளை எல்லாம் சிறுசிறு கதைகள் மூலம் எளிதில் விளக்கும் திறமை வாய்ந் தவர் இராமகிருஷ்ணர். கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற முக்கிய மதங்களையும் பின்பற்றி அவற்றின் மூலமும் இவர் கடவுளைக் கண்டறிந்தார். பற்பல இடங்களில் தோன்றும் ஆறுகள் எல்லாம் ஓடி இறுதியில் கடலில் கலக்கின்றன; அதைப்போல் மதங்கள் பலவேறாக இருந் தாலும், அவை எல்லாம் முடிவில் சென்று கடவுளையே அடைகின்றன என்று இவர் வலியுறுத்தினார்.