பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 இராமானுசர் - சமஸ்கிருதத்தில் அற்புத ராமாயணம், அத்யாத்ம ராமாயணம், ஆனந்த ராமா யணம், வாசிஷ்ட ராமாயணம், சேஷ ராமாயணம் என்ற வேறு ராமாயணங் களும் உண்டு. பௌத்த, ஜைன ராமா யணங்களும் உள்ளன. இவை அந்தந்த சமயக் கொள்கைகளுக்கு ஏற்ப மாறுதல் களுடன் காணப்படுகின்றன. இராமாயணத்தைக் கம்பர் தமிழில் இயற்றியுள்ளார். இதற்குக் கம்பராமா யணம் என்று பெயர். இது 12,000 செய் யுள்களைக் கொண்டது. சொல்லமைப்பு, அழகு, உயர்ந்த கற்பனை ஆகிய சிறப்புகளை உடையது. வான்மீகி இராமாயணத்தைத் தழுவியே கம்பர் இக்காவியத்தை இயற் றினார். எனினும், தமிழரின் உயர்ந்த பண் பாட்டுக்கும், நாகரிக மரபுகளுக்கும் ஏற்ப அவர் கதையில் சில மாறுதல்களைச் செய் திருக்கிறார். கம்பராமாயணம் தமிழில் இணையற்று விளங்கும் ஒரு காவியமாகும். இராமாயண வெண்பா, இராம நாடகம் என்ற நூல்களும் தமிழில் உள்ளன. வான்மீகி இராமாயணத்தை ஆதார மாகக் கொண்டு பல்வேறு மொழிகளில் பல புலவர்கள் இராமாயணம் எழுதியிருக் கிறார்கள். இந்தியில் துளசிதாசரும், வங்காளியில் கிருத்திவாசரும் வான்மீகியை ஆதாரமாகக் கொண்டு பெரிய காவியங்கள் செய்துள்ளனர். கன்னடத்தில் பம்ப ராமா யணம், குமுதேந்து ராமாயணம், ஜீன ராமாயணம் என்ற ராமாயணங்கள் உள் ளன. இவற்றுள் , பம்ப ராமாயணம் சமண சமயச் சார்புடையது. மற்ற இந்திய மொழிகளிலும் ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகளிலும் இராமாயணம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இராமானுசர் (1017-1137):இந்து மதத்தின் உட் பிரிவுகள் சிலவற்றுள் ஒன்று சைவம், மற்றொன்று வைணவம். சிவ பெருமானை முதற் கடவுளாகக் கொள்ளு வது சைவசமயம். திருமாலை முதற் கடவு ளாகக் கொள்ளுவது வைணவம். அவ்வப் போது பல பெரியார்கள் பிறந்து சைவத் தயுைம் வைணவத்தையும் வளர்த்து வந்தனர். வைணவத்தை வளர்த்தவர் களுள் ஒருவர் இராமானுசர். இவருக்கு எதிராசர், உடையவர், எம்பெருமானார் என்றும் பெயர்கள் உண்டு. கடவுளுக்கு உலகமும் உயிர்களும் உடம்புகளாக உள் ளன; நாம் அனைவரும் கடவுளை அறிய வேண்டும்; அதற்கு நாம் அவரிடம் அன்பு கொள்ள வேண்டும்; அவரிடம் நம்மை அடிமைகளாக ஒப்படைத்துவிட வேண்டும் என்று இராமானுசர் போதித்தார். இவருடைய போதனைகளுக்கு விசிட்டாத் துவைதம் என்று பெயர். - இராமானுஜன் > ஸ்ரீபெரும்பூதூரில் உள்ள இராமானுசர் உருவச் சிலை இவர் தமிழ்நாட்டில் செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள ஸ்ரீ பெரும் பூ தூரில் 1017-ல் பிறந்தார். இவர் தந்தை கேசவப் பெருமாள்; தாய் காந்திமதி. இராமானு சர் இளமையிலேயே வேதங்கள் பயின்றார். இவருக்குத் திருமணமும் நடந்தது. ஆனால் இல்வாழ்க்கையைத் துறந்தார். இராமானுசர் முதலில் யாதவப் பிரகாசரிடமும், பிறகு திருக்கோட்டியூர் நம்பியிடமும் சீடராக இருந்தார். இவர் காலத்தில் ஸ்ரீரங்கத்தில் ஆளவந்தார் என்ற ஆசாரியார் இருந்தார். அவர் கட் டளைப்படியே இராமானுசர் பகவத்கீதை முதலிய நூல்களுக்கு விரிவுரை எழுதினார். பல ஆண்டுகள் இராமானுசர் மைசூரில் வாழ்ந்து வந்தார். மக்களுள் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு கூடாது என்று இவர் கூறினார். பொதுவான குளம், கிணறுகளில் தண்ணீர் எடுக்கும் உரிமை எல்லா மக்களுக்குமே உண்டு என்று இவர் வலியுறுத்தினார். தாழ்ந்தவர்கள் என்று ஒதுக்கிவைத்த மக்களுக்கும் வேதங்களை யும் சாத்திரங்களையும் பயிற்றுவித்தார். இராமானுசர் இந்தியா முழுவதும் சுற்றி வந்தார். இவர் ஸ்ரீரங்கத்தில் 1137-ல் தம் 120ஆம் வயதில் மறைந் தார். இராமானு ஜன் (1887-1920 ) : மிகப் பழங்காலத்திலேயே இந்தியாவில் கணிதத்தில் வல்லவர்கள் பலர் இருந்தனர். ஆரியபட்டரும், வராகமிகிரரும் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் வாழ்ந்த வர்கள். இவர்கள் கணிதத்திலும் வானவியலிலும் பல உண்மைகளைக் கண்டு பிடித்தார்கள். இவர்களைப் போன்ற ஒரு பெரிய கணித அறிஞர் இராமானுஜன் ;