பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியவர்களுக்கும் உடற்பயிற்சி அவசியம், ஜெர்மனியில் நடைபெற்ற இந்த ஓட்டப் பந்தயத் தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். 32 உடற்பயிற்சி NUTRITION இளமைப் பருவத்தில் உடல் உரத்தை வளர்க்கும் ஆட்டங்களில் ஈடுபட வேண் டும். ஓடுதல், குதித்தல், கால்பந்தாட்டம், நீந்துதல் போன்ற ஆட்டங்களினால் கை, கால், மார்புத் தசைகள் வலுவடை கின்றன. உடல் பலம் பெறுகிறது. நம் உடல் உறுப்புகள் ஒழுங்காக வேலை செய்யத் தசைகள் முறையாக இயங்க வேண்டும். உடற்பயிற்சியினால் தசைகள் சுருங்கி விரிகின்றன. இதனால் சுவாசம், இரத்த ஓட்டம், சீரணம் முதலியன ஒழுங் காக நடைபெறுகின்றன. அதற்கான உறுப்புகள் முறையாகச் செயல்படுகின் றன. இரத்தத்தை உடலெங்கும் பரவச் செய்யும் இதயம் (த.க.), அசுத்த இரத்தத் தைச் சுத்த இரத்தமாக மாற்றக்கூடிய நுரையீரல்(த.க.), இரத்தத்திலுள்ள நச்சுப் பொருள்களையும், கழிவுப் பொருள்களை யும் நீக்கிச் சுத்தம் செய்கின்ற மூத்திரக் காய்க ள் (Kidneys), கல்லீ ரல் (Liver) போன்ற உறுப்புகள் நன்கு வேலை செய் வதற்கும் உடற்பயிற்சி உதவுகின்றது. நாளும் உடற்பயிற்சி செய்வதால் உடல் உரம் பெறும்; அறிவு கூர்மையாகும்; சோர்வு நீங்கும்; சுறுசுறுப்பு உண்டாகும். ஒவ்வொருவரும் தத்தம் உடலின் சக்திக்கு ஏற்ப உடற்பயிற்சி செய்துவர வேண்டும். நாள்தோறும் காலையில் 10 முதல் 15 நிமிட நேரம் உடற்பயிற்சி செய்யலாம். பயிற்சிக்குப்பின் உடனே சாப்பிடுவதோ, சாப்பிட்ட உடன் பயிற்சி செய்வதோ கூடாது. காலையில் உறங்கி எழுந்தபின் உடற்பயிற்சி செய்வது நல்லது. உடை குறைவாகவும், தளர்த்தியாக வும் அணிந்து, காற்றோட்டமான இடத் தில் உடற்பயிற்சி செய்யவேண்டும். உடற் பயிற்சிக்குப் பின் சற்று நேரம் பொறுத் துக் குளிக்கவேண்டும். பெரியவர்களுக் களும், பலவீனமானவர்களும் இரத்த உண்ணி ஓட்டத்தைப் பெருக்க எளிய உடற்பயிற்சி களைச் செய்யவேண்டும். இளமையிலிருந்தே உடல் வலிவோடும், ஊக்கத்தோடும் வளரவேண்டும் என்பதால் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் உடற் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறது. உண்ணி : நாய், பூனை இவற்றை நாம் விரும்பி வளர்க்கிறோம். சில சமயம் இவற்றுக்குச் சொறி பிடித்துவிடுகிறது. உரோமங்கள் உதிர்ந்துவிடுகின்றன. இதற் குக் காரணம் உண்ணி என்ற ஒரு சிறிய உயிரினந்தான். மற்ற பிராணிகளின் உடலில் ஒட்டிக்கொண்டு, அவற்றின் இரத் தத்தைக் குடித்து உண்ணிகள் உயிர் வாழ் கின்றன. உண்ணியின் உடல் தட்டையாக இருக் கும். மற்ற உடல் உறுப்புகள் நன்கு வளர்ந்து இரா. சிலவகை உண்ணிகளுக் குத்தான் கண்கள் இருக்கும். உண்ணியின் வாய்க்கு அருகில் ஊசி போன்ற நீண்ட உறுப்பு ஒன்று உண்டு. இதன் மூலந்தான் உண்ணி இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கிறது. உண்ணி பல நாள்கள் உண்ணாமல் உயிர் வாழக்கூடியது. இது குப்பை கூளங்களில் முட்டை இடும். சில உண்ணிகள் தாம் வர்ழும் பிராணிகளின் உடலிலேயே முட்டை இடும். ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மிக எளிதில் பரவக் கூடியது உண்ணி. இவ்வாறு பரவும்போது இதனுடன் நோய்க் கிருமிகளும் சேர்ந்து பரவும். மனிதனுக்குச் சொறி, சிரங்கு வருவதற்கும் ஒரு வகை உண்ணியே காரணம். மற்ற உயிரினங்களைச் சார்ந்து வாழும் உயிரினங்களுக்கு ஒட்டுண்ணிகள் (த.க.) என்று பெயர். பிராணிகளில் மட்டு மின்றித் தாவரங்களிலும் ஒட்டுண்ணிகள் உண்டு . |