பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரதம் தாதுப் பொருள்கள் 34 உத்தரப் பிரதேசம் நன்கு வேலை செய்யவும், கண் பார்வை தெளிவாக இருக்கவும், எலும்பு வளர்ச் சிக்கும் வைட்டமின்கள் தேவை. சொறி சிரங்கில்லாமல் தோல் சுத்தமாக இருப் பதற்கும் வைட்டமின்கள் உதவுகின்றன. பார்க்க : வைட்டமின்கள். உலகில் வெவ்வேறு பகுதியிலுள்ள மக்கள் ஒரேவிதமான உணவை உண்ப தில்லை. உணவுப் பழக்கம் இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. உணவுப் பழக்கங் களில் இந்தியாவிலும் பல மாறுபாடுகளைக் காணலாம். வட இந்தியாவில் மக்கள் உண் ணும் உணவில் கோதுமை பெருமளவிலும் தென்னிந்தியாவில் அரிசி பெரும்பகுதியும் சேர்கின்றன. தமிழ் நாட்டில் பெரும் பாலும் அரிசியைத் தீட்டிவிடுகிறார்கள். தீட்டிய அரிசியில் மாச்சத்து தவிர மற்ற சத்துகள் எல்லாம் தவிட்டுடன் போய்விடு கின்றன. கையால் குத்திய அரிசிதான் நல்ல ஊட்டம் அளிக்கக்கூடியது. பருப்பு வகைகள், காய்கறிகள், கீரைகள், பழங் கள், பால் இவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும். உடலை வளர்ப்பது உணவு. எளிதில் சீரணமாகக் கூடிய சீருணவை (Balanced diet ) நாம் நாளும் உண்ண வேண்டும். உணவு முறைகள் ஒழுங்காக இருந்தால் தான் உடல் நோயின்றி ஆரோக்கியமாக இருக்கும். உத்தரப் பிரதேசம்: இந்தியா வின் 17 மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் ஒன்றாகும். இது இந்தியாவிலேயே மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலம். இதன் பரப்பு 2,94,364 சதுர கிலோ மீட்டர். மக்கள் தொகை 7,37,46,000. லட்சு மணபுரி இதன் தலைநகரம். இம்மாநிலத் தின் வடக்கே இமயமலையும் தெற்கே மலைப்பாங்கான பிரதேசமும் உள்ளன. இடையில் சமவெளி உள்ளது. இமயமலை யில் உற்பத்தியாகும் கங்கை, யமுனை, கோமதி, ராமகங்கா, காக்ரா முதலிய ஆறுகள் இச்சமவெளியில் பாய்கின்றன. இந்த ஆறுகளால் இப்பகுதி மிகவும் செழிப்பாக இருக்கிறது. இம் மாநிலத்தில் விவசாயமே முக்கியத் தொழில். மக்களுள் 75 சதவிகிதத்தினர் விவசாயிகள். கோதுமை முக்கியப் பயிர். நெல், பார்லி, கரும்பு, ஆளிவிதை, கடுகு, நிலக்கடலை, பருத்தி முதலியனவும் பயிரி டப்படுகின்றன. கரும்பு ஆலைகள் அதிகம். எண்ணெய், புகையிலைப் பொருள்கள், எந் திரக் கருவிகள், மின்சார சாதனங்கள், தோல், பருத்தி - கம்பள ஆடைகள் முதலியன இம்மாநிலத்தில் அதிகமாகத் தயாரிக்கப்படுகின்றன. குடிசைத் தொழில் களும் இங்கு அதிகம். - உதகமண்டலம் சார நாத் என்னுமிடத்தில் உள்ள தமேக் தூபி உத்தரப் பிரதேசத்தின் படத்தை முதல் தொகுதியில் 84ஆம் பக்கத்திலுள்ள இந்தியா தேசப்படத்தில் காணலாம். உத்தரப் பிரதேசத்தில் உள்ள நகரங் களில் கான்புரி ஒரு பெரிய கைத்தொழில் நகரம் ஆகும். வாரணாசி என அழைக்கப் படும் காசி (த.க.) நகரின் உலோக வேலைப் பாடு உலகப் புகழ் பெற்றது. இங்கு டீசல் ரெயில் எஞ்சின் உற்பத்தி செய்யும் தொழிற் சாலை உள்ளது. ஆக்ரா, அலிகார், அலகா பாத், காசி, கோரக்பூர், லட்சுமணபுரி, ரூர்க்கி ஆகிய நகரங்களில் பல்கலைக்கழகங் கள் உள்ளன. ஆக்ராவில் உலகப் புகழ் பெற்ற தாஜ்மகால் உள்ளது. பந்த் நகர் என்ற இடத்தில் விவசாயப் பல்கலைக்கழகம் உள்ளது. அலகாபாத் நகரில் உயர் நீதி மன்றம் உள்ளது. சாரநாத்தில் பௌத்த விகாரையும் பொருட்காட்சிசாலையும் உள்ளன. இந்துக்களுக்கு கங்கையும் யமுனையும் மிகப் புனிதமான ஆறுகள். காசி, அலகா நாத் முதலியவை உத்தரப்பிரதேசத் திலுள்ள முக்கியப் புண்ணியத்தலங்கள். உதகமண்டலம் : கோடைகாலத் தில் வெயிலின் கொடுமை தாங்க முடியாதிருக்கிறது அல்லவா? இதற்காகப் பலர் உயரமான மலைப் பிரதேசங் களுக்குச் செல்வதுண்டு. மிக உயரமான இடங்களில் வெப்பம் அதிகம் இல்லாமல் குளிர்ச்சியாக இருக்கும். வசிப்பதற்கு இத மாக இருக்கும். இத்தகைய சுகவாசத் தலங்கள் தமிழ்நாட்டில் சில உள்ளன. நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான உதக மண்டலம் இவற்றுள் ஒன்று. இந்தியாவி லுள்ள மலைவாசத்தலங்களிலெல்லாம் இது சிறந்தது. எல்லாப் பருவங்களிலும் இங்கு வசிக்கலாம். உதகமண்டலம் சுமார் 2,300 மீட்டர் (7,500 அடி) உயரத்தில் அமைந்திருக்