பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36) உயர்த்தி எஃகு வடம் எதிர் எடை பெட்டி உயர்த்தி உயர்த்திகள் அமைக்கப்பட்டுள்ள கட்ட டத்தின் உச்சியில் மின்சார மோட்டார் ஒன்று இருக்கும். அதை இயக்கினால் ஒரு சக்கரம் மெதுவாகச் சுழலும். மிக உறுதி யான எஃகு வடம் ஒன்று அந்தச் சக்கரத் தைச் சுற்றிவரும். அந்த வடத்தின் ஒரு முனையில் மக்களை ஏற்றிச் செல்லும் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும். மற்றொரு முனை யில், இப்பெட்டியை விடச் சிறிது கனமான இரும்பு எடை (எதிர் எடை) ஒன்று இணைக் கப்பட்டிருக்கும். பெட்டி தரைமட்டத் லிருந்து கட்டடத்தின் உச்சிவரை செங்குத் தாகச் செல்லும். பெட்டி மேலே செல்லும் பொழுது எதிர் எடை கீழே இறங்கிவரும்; பெட்டி கீழே இறங்கும்போது எதிர் எடை மேலே செல்லும். இவ்வாறு எதிர் எடை யைப் பயன்படுத்துவதால் குறைந்த அளவு சக்தியைக் கொண்டு உயர்த்தியை இயக்கலாம். மின்சார மோட்டார் பெட்டி யின் முழுப் பளுவையும் உயர்த்த வேண் டிய தேவையில்லை. பெட்டியின் கனத்துக் கும் எதிர் எடைக்கும் இடையே உள்ள வேறுபட்ட எடையை மட்டும் உயர்த் தினால் போதும். மக்களை ஏற்றிச் செல்லும் பெட்டியில் மின்சார மோட்டாரை இயக்கும் பொத் தான் பொருத்தப்பட்டிருக்கும். மாடி களின் எண்களைக் குறிக்கும் பொத்தான் களும் இருக்கும். எந்த மாடிக்குச் செல்ல வேண்டுமோ அந்த மாடிக்கு உரிய பொத் தானை அழுத்தினால், உயர்த்தி அந்த மாடிக்குச் சென்று நிற்கும். உயர்த்தியை எந்த மாடியிலிருந்தும் மற்றொரு மாடிக்கு வரச் செய்யலாம். உயிரணு உயர்த்தி இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று மின்சாரம் நின்று விட்டாலோ அல்லது வேறு ஏதேனும் பழுது ஏற்பட்டாலோ கீழே விழுந்து விடாமலிருக்க நல்ல பாதுகாப்பு ஏற்பாடு களும் உயர்த்தியில் அமைக்கப்பட்டிருக் கின்றன. உயிரணு ( Cell ) : ஒரு சுவர் எவ் வாறு செங்கற்களால் கட்டப்பட்டிருக் கிறதோ அவ்வாறே மனித உடலும், விலங்கு, தாவரம் ஆகிய எல்லா உயிர் களின் உடல்களும் மிகமிக நுண்ணிய உயிரணுக்களால் ஆக்கப்பட்டுள்ளன. கட்டடத்தைக் கட்டுவதற்கு அடிப்படை செங்கல். அதுபோல் உடலை அமைப் பதற்கு இந்த நுண்ணிய உயிரணுவே அடிப்படை ஆகும். மிகச் சிறிய உருவத்தை மிகப் பெரி தாகக் காட்டும் மைக்ராஸ்கோப்பினால் தான் (த.க.) உயிரணுக்களைப் பார்க்க இயலும். ஆனால் சில உயிரணுக்கள் தம் முள் உணவைச் சேர்த்து வைத்திருப்ப தால் சற்றுப் பெரிதாகப் புள்ளிகள் போல் தோன்றும். இவற்றைக் கண்ணால் பார்க்க லாம். கோழி முட்டையிலுள்ள மஞ்சள் கருவும் ஓர் உயிரணுதான். எல்லா உயிரணுக்களும் ஒரே வடிவத் திலோ அளவிலோ இருப்பதில்லை. இரத் தத்திலுள்ள சிவப்பு அணுக்களைப் போல் சில தட்டையாக இருக்கும். இரத்த வெள் ளணுவுக்குக் குறிப்பிட்ட ஒரு வடிவம் கிடையாது. இதயத்திலுள்ளதைத் தவிர மற்ற தசை உயிரணுக்கள் நீண்டு, இரு நுனிகளும் கூர்மையாக இருக்கும். நரம்பு உயிரணுக்கள் மிக மெல்லிய மயிரிழைகள் போன்று கிளைகளுடன் காணப்படும். இலை யின் மேற்பரப்பிலுள்ள உயிரணுக்கள் கூம்பு வடிவில் கனத்த சுவர்களுடன் இருக் கும்; இலையிலுள்ள மற்ற உயிரணுக்கள் நீண்ட சதுரமாக இருக்கும். மனித உடலும், விலங்கு- தாவரம் இவற்றில் பெரும்பாலானவற்றின் உடல் களும் இலட்சக்கணக்கான உயிரணுக் களால் ஆனவை. ஒரே ஓர் உயிரணுவா லான சில பிராணிகளும் தாவரங்களும் உண்டு. புரோட்டோசோவா, அமீபா ஆகிய பிராணிகளும், ஆல்கா கிளாமிட மோனஸ் என்ற தாவரமும் ஒரே உயிரணு வால் ஆகியவை. உடலிலுள்ள உயிரணுக்கள் பல வகையின. இவை ஒவ்வொன்றும் ஒவ் வொரு வேலையைச் செய்கின்றன. கண் ணிலுள்ள உயிரணுக்கள் பார்க்க உதவு கின்றன. இரைப்பையிலுள்ளவை சீரணிக்க உதவுகின்றன; நரம்பிலுள்ளவை செய்தி களைத் தெரிவிக்கும். சில உயிரணுக்கள்