பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

42 12 உலக அதிசயங்கள் ஏழு - உலக யுத்தம் பாபிலன் தொங்கு பூங்காக்கள் : மேற்கு ஆசியாவில் யூப்ரட்டீஸ், டைக்ரிஸ் என்னும் ஆறுகளின் கரையில் பாபிலன் என்ற நகரம் புகழ்பெற்று விளங்கியது. நெப்புக் கெட்நெஸர் என்ற மன்னர் தம் மனைவியை மகிழ்விப்பதற்காக இங்கு மாபெரும் அரண்மனை ஒன்றைக் கட்டினார். அதைச் சுற்றிக் கூம்பு வடிவத்தில் சதுரமான ஐந்து மாடங்கள் அமைத்தார். இம் மாடங்கள் ஒவ்வொன்றும் பெரிய தோட் டத்தின் அளவுக்குப் பெரும்பரப்புடைய தாயிருந்தன. அந்த மாடங்களில் உலகெங்குமிருந்து மரங்களையும், மலர்ச் செடிகளையும் கொணர்ந்து நட்டுப் பயிராக் கினார். அவை செழித்து வளர்ந்து, அழகிய தோட்டங்களாக மாறி, ஆகாயத்தில் தொங்குவதுபோல் தோற்றமளித்தன. ஜூப்பிட்டர் சிலை: ஜூப்பிட்டர் என்ற கடவுளுக்கு, கிரீஸ் நாட்டிலுள்ள ஒலிம்ப்பியாவில் பீடியாஸ் என்ற புகழ் பெற்ற சிற்பி ஒரு பிரம்மாண்டமான சிலையை எழுப்பினார். இச்சிலையின் உயரம் 40 அடி. இதன் ஆடைகள் தங்கத் தகட் டினாலும், உடல் தந்தத்தாலும், கண்கள் விலையுயர்ந்த இரத்தினங்களினாலும் ஆனவை. சுமார் 2,400 ஆண்டுகளுக்கு முன் வடிக்கப்பட்ட இச்சிலை பல நூறு ஆண்டுகள் இருந்து அழிந்து போயிற்று. டயானா கோயில்: இது ஆசியா மைனரில் (துருக்கி) யூபிசஸ் என்ற இடத் தில் கி.மு. 350-ல் டயானா என்னும் தேவதைக்குச் சலவைக் கல்லால் கட்டப் பட்ட கோயில். 60 அடி உயரத் தூண்கள் இக்கோயில் முகட்டைத் தாங்கி நின்றன. இங்குத் தலைறெந்த கிரேக்கச் சிற்பிகள் செய்த சிலைகள் பல இடம் பெற்றிருந்தன. கி.பி. 262-ல் படையெடுத்து வந்த காத் தியர்கள் இக்கோயிலை அழித்துவிட்டார் கள். இக்கோயில் தூண்களின் சிதைவுகள் இப்போது பிரிட்டிஷ் பொருட்காட்சிசாலை யில் உள்ளன. இது மாசோலஸ் மன்னன் கல்லறை: வும் ஆசியா மைனரில் இருந்தது. காரியர் என்னும் பகுதியை ஆண்ட மாசோலஸ் என்ற மன்னன் கி.மு. 353-ல் இறந்ததும், அவன் மனைவியான ஆர்ட்டீமீசியா அரசி, ஹாலிகார்னசஸ் என்ற இடத்தில் இக் கல்லறையைக் கட்டினாள். இது 100 அடி உயரமானது. இதன் உச்சியில் குதிரை பூட்டிய தேரில் அரசனும் அரசியும் வீற் றிருக்கும் சிலை ஒன்று இருந்தது. இது பல நூறு ஆண்டுகள் நிலைத்திருந்து, பூகம்பத்தால் தகர்ந்துவிட்டது. இதன் சிதைவுகளை 1800-ல் கண்டெடுத்து பிரிட் டிஷ் பொருட்காட்சிசாலையில் வைத்திருக் கிறர்கள். பின் ரோட்ஸ் பேருருவச் சிலை: ஈஜியன் கடலிலுள்ள ரோடுத் தீவில் ஹீலியஸ் என்னும் சூரியக் கடவுளுக்கு அமைக்கப் பட்ட சிலை இது. கி.மு. 280-ல் எழுப்பப் பட்ட இச்சிலை முற்றிலும் வெண்கலத் தினாலானது. இதன் உயரம் 100 அடி. இது துறைமுகத்தின் நுழைவாயிலில் கால் களை அகல விரித்தவாறு நின்றிருந்ததாக வும், கால்களுக்கு நடுவில் கப்பல்கள் போய்வந்ததாகவும் கூறுவர். இது 56 ஆண்டுகள் மாலுமிகளுக்குக் கலங்கரை விளக்கமாகப் பயன்பட்டது. கி.மு. 224-ல் பூகம்பத்தால் விழுந்து அழிந்துவிட்டது. எகிப்தின் ஒரு பகுதியாகிய பாரோஸ் என்ற தீவில் கி.மு. 280-ல் இரண்டாம் டாலமி என்ற அரசர் இதைக் கட்டினார். 100 அடி சதுர அடித்தளத்தின்மேல் இது 400 அடி உயர்த்து நின்றது. இதன் உச்சி யில் தீ எரிந்து கொண்டிருக்கும். தீயின் ஒளி மாலுமிகளுக்கு வழிகாட்டியது. இது 1,500 ஆண்டுகள் நீடித்திருந்தது. பிறகு பூகம்பத்தால் அழிந்தது. அலெக்சாந்திரியா கலங்கரை விளக்கம்: உலகம்: நாம் வாழும் இந்தப் பூமியைத்தான் உலகம் என்று சொல்லு கின்றோம். பூமி உருண்டை வடிவமானது. இதன் மேற்பரப்பில் 30% நிலம்: 70% நீர். தீர்ப்பரப்பிள் சிறு பகுதிகளுக்குக் கடல் என்றும் பெரிய பகுதிகளுக்குச் சமுத்திரம் என்றும் என்றும் பெயர். பூமியின் நிலப்பரப்பு ஏழு கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அன்டார்க் டிகா என்பன அவை. நீர்ப்பரப்பு ஐந்து சமுத்திரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை பசிபிக் சமுத்திரம், அட்லான்டிக் சமுத்திரம், இந்திய சமுத்திரம், அன் டார்க்டிக் சமுத்திரம், ஆர்க்டிக் சமுத் திரம் என்பன. இவற்றுக்குத் தனிக் கட் டுரைகள் உண்டு. பார்க்க: பூமி. உலக யுத்தம்: சென்ற அறுபது ஆண்டுகளில் மிகப் பெரிய யுத்தங்கள் இரண்டு நடைபெற்றுள்ளன. இந்த இரண் டிலும் உலகின் பெரும்பாலான நாடுகள் கலந்து கொண்டதால் இவற்றுக்கு உலக யுத்தங்கள் என்று பெயர். முதல் உலக யுத்தம் 1914 முதல் 1918 வரை நான்கு ஆண்டுகள் நடைபெற்றது. இரண்டாம் உலக யுத்தம் 1939 முதல் 1945 வரை யில் ஐந்தாண்டுகளுக்கு மேல் நடந்தது. முதல் உலக யுத்தம்: ஜெர்மனியில் மக்கள் தொகை பெருகிக்கொண்டே போயிற்று. மக்கள் வாழ இடம் போத வில்லை. ஆப்பிரிக்காவில் இடம் பிடிக்க ஜெர்மனி முயன்றது. ஆனால் பிரிட்டனும் பிரான்ஸும் ஜெர்மனிக்கு இடங்கொடுக்க மறுத்தன. இதனால் ஆத்திரமடைந்த