பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உலோகங்கள் உடையா; எல்லா உலோகங்களுக்கும் பொது வாகச் சில தன்மைகள் உண்டு. சுத்தியால் அடித்தால் அவை ஆனால் தெகிழும். இதனால் உலோகங்களை நமக்கு வேண்டிய வடிவங்களில் அமைக்கலாம். அவற்றை உருக்கி அச்சுகளில் ஊற்றித் தேவையான உருவத்தில் வார்க்கலாம். மெல்லிய தகடுகளாக அடிக்கலாம். நுண் ணிய கம்பிகளாக இழுக்கலாம். எல்லா உலோகங்களும் வெப்பத்தையும், சாரத்தையும் கடத்தக்கூடியவை. உள்ளெரி எஞ்சின் ஆர்சனிக் ஆஸ்மியம் 47 உலோகங்கள்

  • செம்பு 'செலீனியம் சோடியம்

பெர்க்கீலியம் பெரிலியம் பேரியம் பொட்டாசியம் பொலோனியம் போரான்

  • மக்னீசியம்

மாங்கனீஸ் மாலிப்டினம்

  • யுரேனியம்
  • அலுமினியம்

அன்டிமனி ஆக்டீனியம் ஆமரிசியம் டங்ஸ்ட்டன் டான்டலம் டிஸ்ப்புரோசியம் இட்டர்பியம் டெக்னீசியம் இட்ரியம் டெர்பியம் மின் இண்டியம் டெலூரியம் இரிடியம்

  • டைட்டேனியம்

இரும்பு

  • தங்கம்

யூரோப்பியம் எர்பியம் தாலியம் ரீனியம் கடமியம்

  • துத்தநாகம்

ருதீனியம் காடலினியம் தூலியம் ருபிடியம்

  • காரீயம்
  • தோரியம்
  • ரேடியம்

கால்சியம்

  • நிக்கல்

ரோடியம் காலிபோர்னியம் நியோடிமியம் லாந்தனம் நெப்டியூனியம் லிதியம் பல்லேடியம் லுட்டீசியம்

  • பாதரசம்

கொலம்பியம் பிரான்சியம் வெள்ளி கோபால்ட்

  • வெள்ளீயம்

சமேரியம்

  • பிளாட்டினம்.

ஜெர்மானியம் சர்க்கோனியம் பிஸ்மத் புரோட்டாக்டீனியம் புரோமீதியம் பெரும்பாலான உலோகங்கள் சூடாக்கி னால் விரிவடையும்; குளிர வைத்தால் சுருங்கும். அண்டிமனி என்ற உலோகம் மட்டும் குளிரவைத்தால் விரிவடையும். உலோகங்களில் பல நீரைவிடக் கன மானவை; அவை நீரில் மூழ்கும். ஆனால் பொட்டாசியம், சோடியம், விதியம் ஆகியவை நீரைவிட இலேசானவை. இவை நீரில் மிதக்கும். எல்லா உலோகங்களும் பூமியிலிருந்து தான் கிடைக்கின்றன. தங்கம், பிளாட் டினம் போன்ற சில உலோகங்கள் வேறு பொருள்களுடன் கலக்காமல் தனியாகக் கிடைக்கின்றன. பல உலோகங்கள் தனி யாகக் கிடைப்பதில்லை. இவை ஆக்சிஜன், கந்தகம் போன்றவற்றுடன் கலந்த கூட் டுப் பொருள்களாகவே கிடைக்கின்றன. இந்தக் கூட்டுப் பொருள்களுக்குத் தாதுக் கள் (த.க.) என்று பெயர். பல வழிகளில் தாதுவிலிருந்து உலோகத்தைத் தனியாகப் பிரித்து எடுக்கலாம். உலோகங்கள் நமக்குப் பல வழிகளில் பயன்படுகின்றன. தங்கம், வெள்ளி, பிளாட்டினம் இவற்றால் நகைகளும், நாணயங்களும் செய்யலாம். நிக்கல், செம்பு இவற்றாலும் நாணயங்கள் செய் கிறார்கள். இரும்பினால் எந்திரக்கருவி களும், ஆயுதங்களும் செய்யலாம். குழாய் கள் செய்யக் காரீயம் பயன்படுகிறது. செம்பினாலும் அலுமினியத்தாலும் பாத் திரங்கள் செய்யலாம். யுரேனியம், தோரியம் என்ற உலோகங்கள் குண்டு தயாரிக்கப் பயன்படுகின்றன. அணு பெரும்பாலான உலோகங்களைத் தனி யாகப் பயன்படுத்த முடியாது. உதாரண மாகத் தங்கம் எளிதில் வனையும். அதனுடன் செம்பு சேர்த்தால்தான் அது உறுதியாக இருக்கும். இவ்விதம் உலோகங் சுளை ஒன்றாகக் கலந்து பெற்ற பொருள் களுக்கு உலோகக் கலவைகள்(த.க.) என்று பெயர். வெண்கலம், எஃகு பித் தளை இம்மூன்றும் உலோகக் கலவைகளில் முக்கியமானவை. இக்காலத்தில் உலோகங் களைப் பற்றி ஆராய்வது ஒரு தனி விஞ் ஞானமாகவே வளர்ந்துள்ளது. இதற்கு உலோகவேலைக் கலை ( Metallurgy ) என்று பெயர். காலியம் கியூரியம் *குரோமியம் சிலிக்கன் சீசியம் சீரியம் பிரேசியோடிமியம் வனேடியம் ஸ்காண்டியம் ஸ்டிரான்ஷியம் ஹாப்னியம் புளுட்டோனியம் ஹால்மியம்

  • இக் குறியிட்டவற்றுக்குத் தனிக் கட்டுரைகள் உண்டு

உள்ளெரி எஞ்சின் : ரெயில் எஞ் சினை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதன் பெரிய சக்கரத்துடன் இணைந்த ஓர் இரும் புத் தண்டு முன்னும் பின்னும் நகருவது வேடிக்கையாக இருக்கும். இதற்குப் பிஸ்ட் டன் என்று பெயர். இது முன்னும் பின் னும் நகரும்போது இதனுடன் இணைத் துள்ள சக்கரமும் சுழல்கிறது; வண்டி புறப் படுகிறது. பிஸ்ட்டனை இவ்விதம் இயக்க நீராவியைப் பயன்படுத்துகிறார்கள். எஞ்சினின் மேற்பாகத்திலிருக்கும் நீண்ட உருளை வடிவமான கொதிகலத்தில் நீராவி உற்பத்தியாகிறது. சிலிண்டர் என்னும் பாகத்திற்குள் அதிக அழுத்தத்தில் நீராவி யைச் செலுத்தும்போது அது அங்குள்ள பிஸ்ட்டனைத் தள்ள, பிஸ்ட்டன் இயங்கு கிறது. நீராவியை உற்பத்தி செய்வதற்கு எஞ்சினின் பின்பாகத்தில் நிலக்கரியை எப் போதும் எரித்துக்கொண்டே இருப்பார் கள். ஆனால் பஸ், கார் ஆகியவற்றில் எஞ் சினை இயக்கும் முறை வேறுவிதமானது; எரிபொருள்களும் வேறு. இவற்றில், சிலிண்டர் என்ற பாகத்திற்குள்ளேயே பெட்ரோல், டீசல் போன்ற எண்ணெய் கள் எரிபொருளாக எரிக்கப்படுகின்றன. அதனால் உண்டாகும் வெப்பமான வாயு, சிலிண்டரில் உள்ள பிஸ்ட்டனைத் தள்ளி எஞ்சினை இயக்கும். இத்தகைய எஞ்சி னுக்கு உள்ளெரி எஞ்சின் என்று பெயர்.