பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எலும்பு மண்டலம் எலும்புகளும் உயிரணுக்களால் (த.க.) ஆனவை; எலும்புகள் வளர வளரப் புதிய எலும்பு உயிரணுக்கள் உண்டாகின்றன; பழைய உயிரணுக்கள் அழிகின்றன. எலும்பின் மேற்புறம் வழவழப்பாகவும் உறுதியாகவும் இருக்கும். உட்பாகம் மிருதுவாக இருக்கும். கடற்பஞ்சில் உள்ளது போல் புரைகள் இருக்கும். எலும்பில் இரண்டு வகையான பொருள்கள் இருக்கின்றன. ஒன்று அமிலத்தில் கரையக் கூடிய கால்சியம் பாஸ்பேட் போன்ற தாதுப்பொருள் ஆகும். மற்றொன்று தீயில் எரிந்து போகும் கரிமப் பொருள். வளர்ச்சி யடைந்த எலும்பில் மூன்றில் இரண்டு பங்கு தாதுப்பொருளும் ஒரு பங்கு கரிமப் பொருளும் இருக்கும். ஒன் மனித உடலில் மொத்தம் 206 எலும்பு கள் உள்ளன. ஆனால் சிறு குழந்தைகளின் உடலில் 350 எலும்புகள் இருக்கும். வயது ஆக ஆகச் சில எலும்புகள் ஒன்றாகச் சேர்ந்துவிடுகின்றன. எலும்புகள் றுடன் ஒன்று பொருந்திச் சேர்ந்திருப் பதற்கு மூட்டுகள் என்று பெயர். இந்த மூட்டுகளில் சில அசையும்; சில அசையா. கை கால்களில் உள்ளவை அசையும் மூட்டு கள். மண்டை எலும்புகள் அசையா மூட்டு கள். ஒரு எலும்பு மண்டலத்தின் முக்கிய பாகம் முள்ளந்தண்டு எனப்படும் முதுகெலும்பு. இது 26 எலும்புகளாலானது. இதனுடன் இணைந்துள்ள மார்பு எலும்புகள் கூண்டு போல் அமைந்திருக்கின்றன. இதற்கு மார்புக்கூடு என்று பெயர். இக் கூட்டினுள் இதயமும், நுரையீரல்களும் பாதுகாப்பாக அமைந்திருக்கின்றன. முள்ளந்தண்டின் உச்சியில் மண்டையோடு பொருந்தி இருக்கும். அடியிலே பிட்ட எலும்போடு இடுப்பெலும்புகள் பொருந்தி இடுப்பெலும்புக் கட்டு அமைந்திருக்கும். தலையில் 22 எலும்புகள் இருக்கின்றன. கீழ்த்தாடை எலும்பு மட்டும் தனியாக இருக்கும். மற்றெல்லா எலும்புகளும் ஒன்றாக இணைந்து, எளிதில் பிரியாமலும், அசையாமலும் இருக்கின்றன. இவை தவிர, காதினுள் மூன்று சிறிய எலும்புகள் ஒரு தொடராக அமைந்துள்ளன. இந்த ஆறு எலும்புகளையும், தொண்டையி லுள்ள நாவெலும்பையும் சேர்த்துத் தலை எலும்புகள் 29 என்று கணக்கிடுவதுண்டு. கையில் மொத்தம் 30 எலும்புகள் இருக்கின்றன. கைகள் தோள்வளையம் என்னும் எலும்புப் பகுதிகளால் முள்ளந் தண்டுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. தோள் வளையத்தில் தோள்பட்டை எலும் பும், முன்னே காறை எலும்பும் உள்ளன. கையிலுள்ள எல்லா எலும்புகளும் நன்றாக அசைந்து பொருள்களைப் பற்ற கின்றன. உதவு மனித எலும்புக் கூடு 69 63 கையிலுள்ளவற்றைப் போலவே காலி லும் எலும்புகள் அமைந்துள்ளன.தொடை எலும்புதான் உடம்பிலுள்ள எலும்புகள் எல்லாவற்றிலும் பெரியது. ஒவ்வொரு காலிலும் மொத்தம் 30 எலும்புகள் இருக் கின்றன. இடுப்பு வளையம் என்னும் பாகம் கால் எலும்புகளை முள்ளந்தண்டோடு இணைக்கிறது. நம் உடலிலுள்ள எலும்புகள் உறுதியாக வும் சீராகவும் இருக்கும்படி நாம் பார்த்துக்