பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்து மதம் : உலகத்தில் இப்போது மக்கள் பின்பற்றி வரும் பல மதங் களுள் இந்து மதமும் ஒன்று. இது மிகவும் பழமையானது. எப்பொழுது இது தோன்றி யது என்று திட்டமாகக் கூறமுடியாது. யாரால் இது தோற்று விக்கப்பட்டது என்றும் சொல்லுவதற்கில்லை. இந்து மதத் தில் பல உள்பிரிவுகள் உண்டு. அவற்றுள் சைவமும், வைணவமும் முக்கியமானவை. சக்தியைவழிபடுபவர்கள், முருகக் கடவுளை வழிபடுபவர்கள், கணபதியை வழிபடுபவர் கள் ஆகியவர்களும் இந்து மதத்தில் உண்டு. வேதங்களின் சாரமாகிய வேதாந்தக் p.1486 சிதம்பரம் - நடராஜர் கோயில் இலக்களஞ்சியம் கொள்கையின்படி சிவன், விஷ்ணு போன்ற தெய்வங்கள் ஒரே பரம்பொருளின் வெவ் வேறு வடிவங்கள் ஆவர். இக்கொள் கைக்கு அத்வைதம் என்று பெயர். கடவுளே எல்லா உயிர்களாகவும், பொருள் களாகவும் விளங்குகிறார் என்பது இக் கொள்கையின் அடிப்படையாகும். இந்திய மக்களில் 84% பேர் இந்துக்கள். நேப்பாள நாட்டிலும் பெரும்பான்மை யாக இந்துக்கள் வாழ்கின்றனர். பாக்கிஸ் தான், பர்மா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனீசியா, பீஜித் தீவுகள், மேற்கிந்தியத் தீவுகள், காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோயில்