பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஏவு படைக்கலம் - ஏற்றவற்றம் இயலாது. குறி தவறுவதற்கும் வாய்ப்பு உண்டு. ஆனால் ஏவு படைக்கலத்தை அனுப்பிய பிறகும் அதை விரும்பும் திசை யில் மாற்றிக் குறி தவறாமல் இலக்கைத் தாக்கும்படிச் செய்யலாம். ராடார் (த.க.) என்னும் கருவியின் துணையால் எதிரியின் விமானத்தை நோக்கி ஏவு படைக்கலம் பறக்கும்படி செய்கிறார்கள். இக்காலத்தில் படைக்கலங்களில் மிகவும் சக்தி வாய்ந்தவை ஏவு படைக்கலங்களே. இவற்றை முதலில் அமைத்தவர்கள் ஜெர் மானியர்கள். இரண்டாம் உலக யுத்தத் தில் அவர்கள் சில வகை ஏவு படைக்கலங் களைப் பயன்படுத்தினார்கள். இவற்றின் நுணுக்கங்களை அமெரிச்சுர்களும், ரஷ்யர் களும் அறிந்துகொண்டனர். மேலும் ஆராய்ந்து இவற்றைத் திருத்தி அமைத்து இன்று சக்தி வாய்ந்த பல ஏவு படைக்கலங் களைத் தயாரித்து வருகின்றனர். ஏவு படைக்கலங்கள் எல்லாம் ராக்கெட்டு களால் (த.க.) இயக்கப்படுகின்றன. ஏவு படைக்கலங்களில் பலவகை உண்டு. ஆகாயத்தில் செல்லும் விமானத் தைத் தரையிலிருந்து தாக்கும் ஏவுபடைக் கலம் ஒரு வகை. விமானத்திலிருந்து கொண்டே இன்னொரு விமானத்தைத் தாக்கவும், விமானத்திலிருந்து தரையி லுள்ள ஓரிடத்தைத் தாக்கவும், தரையில் ஓரிடத்திலிருந்து பல ஆயிரம் கிலோ மீட் டர் தொலைவிலுள்ள மற்றோர் இடத்தைத் தாக்கவும் வெவ்வேறு வகையான ஏவு படைக்கலங்கள் உள்ளன. மேலும், விமானத்திலிருந்து கடலினுள் இருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கவும், நீர் மூழ்கிக் கப்பலிருந்து விமானத்தைத் தாக்க வும் ஏவு படைக்கலங்கள் உண்டு. பார்க்க: ராக்கெட்: ராடார். ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கத்தில் ஏவுகணைப் படை அணிவகுத்துச் செல்லும் காட்சி. ஏவுகணை ஒன்று செலுத்துவதற்குத் தயாராக உள்ளது. 71 ஏற்றவற்றம் (Tides) : கடற்கரை யோரங்களில் கடல் நீர்மட்டம் சில சமயம் உயர்த்தும் சில சமயம் தாழ்ந்தும் இருக்கும். இதைத்தான் கடல்நீரின் ஏற்ற வற்றம் என்பர். கடல் நீர்மட்டம் உயர் வதை 'ஏற்றம்' என்றும், தாழ்வதை 'வற் றம்' என்றும் சொல்வர். சந் ஏற்றவற்றத்திற்குக் காரணம் திரனின் கவர்ச்சிதான், சந்திரனுக்கு நேரே உள்ள பூமியின் பகுதியில் கடல்நீர் கவரப்படுகிறது. இந்தப் பகுதியிலும் இதற்கு நேர் மறுபுறத்திலும் ஒரே சமயத் தில் கடல் நீர்மட்டம் உயருகிறது. பூமி யின் இருபுறங்களிலும் ஏற்றவற்றம் ஒரே சமயத்தில் நிகழ்கிறது. சூரியனுக்கும் கவர்ச்சி சக்தி உண்டு. எனினும், சூரியன் நெடுந்தொலைவிலிருப்ப தால், சந்திரன் கவரும் அளவுக்கு அது கடல்நீரைக் கவர்வதில்லை. சந்திரன், பூமி, சூரியன் இவை மூன்றும் ஒரே நேர்க் கோட் டில் இருக்கும்பொழுது (அமாவாசை யன்றும் பௌர்ணமியன்றும்) சந்திரன், சூரியன் இவையிரண்டின் கவர்ச்சியும் ஒருங்கே செயல்படுவதால் மிக அதிகமான ஏற்றங்கள் உண்டாகின்றன. இவற்றுக்கு உவா ஏற்றங்கள் ( Spring tides ) என்று பெயர். சூரியன், சந்திரன் இவற்றின் விசைகள் நேர்செங்குத்தாக இயங்கும் போது ஏற்றங்களின் உயரம் குறைகிறது. இவற்றுக்கு இடையுவா ஏற்றங்கள் (Neap tides) என்று பெயர்.