பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நண்டு ஓநாய் - ஓவியம் நண்டு இருல் 91 கல்லிறால் ஓட்டுமீன்கள் சில மயிர் மூடியிருக்கும்; முன்னங்காலில் ஐந்து விரல்களும், பின்னங்காலில் நான்கு விரல் களும் இருக்கும். உடலிலும் வாலிலும் மயிர் அடர்த்தியாக இருக்கும். இது இயற்கையாக அஞ்சும் தன்மை உடையது. இது மரப் பொந்துகளிலும், பாறை இடுக்குகளிலும், பெரிய குழிகளி னும் வாழ்கின்றது. ஓநாய் இறைச்சியைத் தின்று வாழும் புலாலுண்ணி விலங்கு. இரையைக் கிழித்துத் தின்பதற்கு ஏற்ற வாறு இதன் பற்கள் மிகவும் கூர்மையாக வும், பலமாகவும் இருக்கும். மான், முயல், ஆடு, மாடு ஆகியவை இதன் முக்கிய இரைகள். இரை கிடைக்காதபோது ஓநாய் கிழங்குகளையும் தோண்டித் தின்னுமாம். ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களில் ஓநாய்கள் வாழ் கின்றன. இந்தியா முழுதும் இவை காணப் படுகின்றன. ரஷ்யாவில்தான் இவை அதிகம். ஓநாய்கள் சுமார் 12 முதல் 15 ஆண்டுகள் வரை உயிர் வாழும். ஓநாய் சங்கு நண்டு ஓவியம்: இரவி வர்மா எழுதியுள்ள ஓவியங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவற்றுள் இலக்குமி, சரசுவதி, சிவ பெருமான் முதலிய தெய்வங்களின் வண்ணப் படங்கள் மிகவும் அழகானவை. தெய்வங்களின் உருவங்கள் மட்டுமின்றி மனிதரின் உருவம், செடி, கொடி, மலை, கடல் ஆகிய எதை வேண்டுமாயினும் ஓவியமாக எழுதலாம். ஓவியம் தீட்டுவது ஓர் உயர்ந்த அழகுக் கலையாகும். ஓவியம் எழுதுபவர்கள் தம் மனத்தில் எண்ணி யதையும், கண்ணால் கண்டதையும் படங்க ளாக எழுதுவார்கள். எல்லோருமே ஓவியராக முடியாது. இதற்கு நல்ல பயிற்சியும், கைத்திறமையும் வேண்டும். தமக்கு வேண்டியவாறு வண்ணங்களைக் கூட்டிக் கொள்ளுவதற்கு அவர்கள் விரி வான பயிற்சியும், அனுபவமும் பெற வேண்டும். துணியின் மேலும், காகிதத்தின்மேலும், சுவரின் மேலும் ஓவியம் தீட்டுவார்கள். பழங்காலத்தில் சுவரின் மேல் சித்திரம் எழுதும் பழக்கம் அதிகமாக இருந்தது. சுவரை வைத்துக்கொண்டுதானே சித்திரம் எழுதவேண்டும்?' என்ற பழ மொழி அதனால்தான் வந்தது. பின்னர் ஒலை,மண்பாண்டம், மரப் பலகை, பாய் ஆகியவற்றின் மேலும் வண்ண ஒவியங்கள் எழுதினர்கள். ஓவியங்கள் தீட்டுவதற்குத் தூசிகை களும், வண்ணப் பசைகள் அல்லது வண் ணக் குழம்புகளும் வேண்டும். தண்ணீரில் எண்ணெயில் குழைக்கும் வண்ணம், குழைக்கும் வண்ணம் என வண்ணங்களில் இரு வகை உண்டு. உலர்ந்து இறுகிய வண்ண மெழுகுகளாலும் ஓவியங்கள் தீட்டுகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆதி மக்கள் தாம் வாழ்ந்து வந்த குகைகளின் சுவர்களின் மேல் விலங்குகளின் உருவங்