பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புகையிலை யான புகையில் மறைந்திருப்பதையும் கண்டுகொள்ள முடிவதால் புகைத் திரையை இப்போது அவ்வளவாகப் பயன் படுத்துவதில்லை. எனினும் யுத்தத்தின் போது பெரும்பாலும் தாக்குதலுக்குள்ளா கும் விமான நிலையங்கள், பாலங்கள் முத லியவற்றை ராணுவத்தினர் இன்றும் புகைத்திரையை உண்டர்க்கி மறைப்ப துண்டு. புகையிலை : பீடி, சுருட்டு, சிகரெட் முதலியவற்றைச் சிலர் புகைப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். புகையிலை என்னும் இலையிலிருந்து இவை தயாரிக்கப் படுகின்றன. புகைக்கப் பயன்படுத்தும் இலை புகையிலை எனப் பெயர்பெற்றது. வெற்றிலை சுவைப்போர் சிலர் புகையிலை யையும் சேர்த்துப் பயன்படுத்துவர், சிலர் புகையிலையை மட்டும் தனியாக வாயில் அடக்கிக்கொள்ளுவது உண்டு. மூக்குப் 11 பொடியும் புகையிலையிலிருந்தே தயாரிக் கப்படுகிறது. புகையிலை ஆதியில் அமெரிக்காக் கண் டத்தில் வளர்ந்தது. அங்குக் குடியேறிய போர்ச்சுகேசியரும் ஸ்பானியரும் இதை மற்ற நாடுகளுக்குப் பரப்பினர். 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்ச்சு கேசியர் இதை இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர். இன்று இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, மைசூர், பீகார், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கனில் இது பயிராகிறது. உலகில் அமெரிக்கா, சீன ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் புகையிலை மிகுதியாக விலைகிறது. புகையிலைச் செடியில் பலவகைகள் உண்டு. பீடி, சுருட்டு, சிகரெட் முதலியவை தயாரிக்கத் தனித்தனி வகைப் புகையிலை பயிரிடப்படுகிறது. புகையிலைத் தோட்டத்தின் ஒரு தோற்றம் பறித்த இலைகளைப் பக்குவப்படுத்துமுன் ஒன்றாகச் சேர்த்துக் கட்டிவைக்கிறார்கள் புகையிலைச் செடி தொழிற்சாலையில் புகையிலையைத் தரம் பிரிக்கிறார்கள்