பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16 புரோட்டோசோவா -புரோமின் போல், ஒளிச்சேர்க்கை (த.க.) முறையில் உணவைத் தயாரித்துக்கொள்கின்றன. உலகெங்கும் நன்னீரிலும், உப்பு நீரிலும், மண்ணிலும், ஈரம் உள்ள எந்த இடத்திலும் புரோட்டோசோவா உயிரினங்கள் வாழ்கின்றன. வறட்சியான காலத்திலும் இவற்றில் சில வகைகள் தம்மை ஓர் உறையால் மூடிக்கொண்டு நெடுநாள் உயிர் வாழும். புரோட்டோசோவா உயிரினங்களில் அமீபாவும், பாரமீசியமும் (Paramecium) முக்கியமானவை. அமீபாளின் உருவம் மாறிக்கொண்டே இருக்கும். இரையை வனைத்து விழுங்கவும், ஊர்ந்துசெல்லவும் இது தன் பொய்க்கால்களைப் பயன்படுத்து கிறது. பாரமீசியம் தன் மயிரிழைபோன்ற உறுப்பினால் நீரில் வேகமாக நீந்தும். புரோட்டோசோவா உயிரினங்களில் சில வேறு பிராணிகளுக்கு உணவாகி றன. எனினும், பெரும்பாலானவற்றால் தீமையே உண்டாகின்றது. ஒட்டுண்ணி களாக வாழும் சிலவகை உயிரினங்கள் மனிதனுக்கு மலேரியா, உறச்சு நோய் (Sleeping Sickness ) போன்ற கொடிய நோய்களை உண்டாக்குகின்றன. கால்நடை களுக்கும், வளர்ப்பு விலங்குகளுக்கும் புரோட்டோசோவா உயிரினங்களில் சில போராஸ்போரா காக்சிடியா அமீபா பாரமீசியம் மேல்வரிசை, அமீபா உணவு உட்கொள்ளும் விதத்தைக் காட்டுகிறது. கீழ்வரிசை, ஓர் அமீபா, இரண்டு அமீபாக்களாகப் பெருகுவதைக் காட்டுகிறது. நோய் விளைவிக்கும் சில புரோட்டோ சோவா உயிரினங்களும் உள்ளன. உலகில் புரோமின் (Bromine) ; நூற்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் (த.க.) உள்ளன. அவற்றுள் பல திடநிலையிலும் சில திரவ நிலையிலும் மற்றும் சில வாயு நிலையிலும் உள்ளன. திரவ நிலையிலுள்ள தனிமங்களில் புரோமின் ஒன்று. புரோமின் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக் கும். நீரைவிட இது மூன்று மடங்கு எடை யுள்ளது. இது நீரில் ஓரளவு கரையும். புரோமினைக் கவனமாகக் கையாள வேண் டும். தோலில் பட்டால் தீப்புண் ஏற்படும். புரோமினிலிருந்து வரும் ஆவி நச்சு மிகுந் தது. கண்களுக்கும், மூச்சு மண்டல உறுப்புகளுக்கும் தீங்கு உண்டாக்கும். புரோமின் சுமார் 100 ஆண்டுகளுக்கு கண்டுபிடிக்கப்பட்டது. எனிஇல் வினைப்படக்கூடியதாகையால் புரோமின் தனியாகக் காணப்படுவதில்லை. கடல் நீரிலும் சில தாது ஊற்றுகளிலும் புரோ மின் உள்ளது. கடல் நீரிலிருந்து உப்புத் தயாரிக்கும் தொழிலில், உப்பைப் பிரித் தெடுத்த பின்னர் புரோமினையும் பிரித் தெடுக்கிறார்கள். முன் தனி நிலையில் புரோமின் அவ்வளவாகப் பயன்படுவதில்லை. ஆனால் புரோமினின் கூட்டுப்பொருள்கள் பல துறைகளில் பயனாகின்றன. வலியைத் தணிக்க உதவும் மருந்தாகப் பொட்டாசியம் புரோமைடு பயன்படுகிறது. மேலும் மேலும் போட்டோத் தொழிலிலும், மோட்டார் வண்டி களுக்குத் தேவைப்படும் பெட்ரோலுடன் சேர்க்கவும், கண்ணீர்ப்புகைக் குண்டுகள் செய்யவும், மற்றும் சாயங்கள். மருந்து வகைகள், பூச்சிகொல்லிகள் முதலிய வற்றைத் தயாரிக்கவும் புரோமின் கூட்டுப் பொருள்கள் பயன்படுகின்றன.