பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புவனேசுவரம் - புவி ஈர்ப்பு தேடச் செல்கின்றன. மான், காட்டு எருமை பசு. காட்டுப்பன்றி முதலியவற் றைப் புலி கொன்று தின்னும். இரையைக் கண்டதும் அதன்பின்னே பதுங்கிப் பதுங் கிச் சென்று, திடீரெனப் பாய்ந்து, முன் கால்களால் அறைந்து கொன்றுவிடும். முன்கால்களிலுள்ள கூரிய நகங்களும் வாயிலுள்ள கூர்மையான பற்களும் இரை யான விலங்கின் உடலைக் கிழித்து உண்ப தற்கு உதவுகின்றன. சில சமயங்களில் чал ஊருக்குள் நுழைந்து ஆடு, மாடுகளைத் தூக்கிச் செல் வதுண்டு. சாதாரணமாக மனிதனைக் கண்டால் புலி ஒன்றும் செய்வதில்லை. ஆனால் விலங்குகளைத் துரத்திப் பிடிக்க முடியாத வயதான புலிகள் மனிதர்களைக் கொல்வதும் உண்டு. தனக்கு தனக்கு ஆபத்து ஏற்படும் எனத் தெரிந்தாலும் அல்லது மனிதன் புலியைச் சுட நினைத்து குறி தவறிவிட்டாலும் புலி மனிதன்மேல் பாயும். அப்படிப் பாய்ந்து மனிதனைக் கொன்று பழகிவிட்டால், பிறகு அந்தப் புளி மனிதர்களைக் கொல்ல முற்படும். புலி சுமார் ஆறு மீட்டர் நீளம்வரை தாண்டும் வல்லமை உடையது. நீரில் இது நன்றாக நீந்தும். புலி ஒரு தடவைக்கு மூன்று முதல் ஆறு குட்டிகள்வரை ஈனும். குட்டிகள் இரண்டு ஆண்டுகள்வரை தாயுடனிருக்கும். அப்போது அவற்றுக்குத் தாய்ப்புலி பிற விலங்குகளைக் கொல்லக் கற்றுக்கொடுக்கும். குட்டிகள் பிறகு தனியாக இரை தேடச் செல்லும். குட்டி களைப் பழக்கி வளர்க்கலாம். பழக்கிய புலிகளை சர்க்கஸ் காட்சிகளில் காணலாம். புலி 30 ஆண்டுகள் வரை உயிர்வாழும். புலி இந்தியாவின் தேசீய விலங்காகும். புவனேசுவரம்: ஒரிஸ்ஸா மாநிலத் தின் புதிய தலைநகரம் புவனேசுவரம். பழைய தலைநகரமான கட்டக் நகரிலிருந்து கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது. இதன் மக்கள்தொகை 28 1,05,000 (1971). புவனேசுவரம் கி.மு. 3ஆம் நூற்றாண்டி லிருந்தே பெருமைபெற்று விளங் கு ம் நகரமாகும். இங்கு பௌத்தம், சமணம், சைவம், வைணவம் ஆகிய சமயங்களைச் சார்ந்த கோயில்களும் நினைவுச்சின்னங் களும் உள்ளன. முற்காலத்தில் கேசரி அரசர்கள் ஒரிஸ் ஸாவை ஆண்டபோது புவனேசுவரமே அவர்களுக்குத் தலைநகரமாக இருந்தது. அவர்கள் இங்கு நூற்றுக்கணக்கான கோயில்களைக் கட்டினர். அதனால் இதற் குக் 'கோயில் நகரம்' என்னும் புகழ் உண்டு. இன்று சுமார் நூறு கோயில்களே புவனேசுவரத்திலுள்ள இலிங்கராஜர் கோயில் 21 எஞ்சியுள்ளன. இவற்றுள் இலிங்கராஜர் கோயில் முக்கியமானது. கலிங்க மரபில் கட்டப்பட்ட கோயில்களில் இது தலைமை வாய்ந்தது. கோபுரத்தின் சிகரம் நெல்லிக் காய் வடிவத்திலிருக்கிறது. இதன்மீது பானை உருவமுள்ள கலசம் உள்ளது. கோபுரம், அடியிலிருந்து உச்சிவரை புகை போக்கிபோல் கூடாக உள்ளது. இது முழுதும் கல்லாலேயே கட்டப்பட்டது. ஒவ்வொரு சுல்லிலும் அழகான செதுக்குச் சிற்பங்கள் உள்ளன. முக்தேசுவரர் கோவில், ராஜராணி கோயில் ஆகியவை மற்ற முக்கிய கோயில்கள். கோயில்களில் உள்ள சிற்பங்கள் யாவும் அழகு மிக்கவை. இந்தியச் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக இவை விளங்குகின்றன. புவனேசுவரத்திற்கு அருகில் உதயகிரி, கண்டகிரி என்ற மலைகளில் பாறைக் குடைவுக் குகைகள் பல உள்ளன. இவை சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட் டவை எனக் கருதப்படுகிறது. புவி ஈர்ப்பு (Gravity) : பந்தை மேல்நோக்கி எறிந்தால் அது சிறிது தொலைவு உயரச் சென்று பிறகு பூமியை நோக்கி விழத் தொடங்குகிறது. இது ஏன் என்று நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா? 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நியூட்டன் (த.க.) என்னும் ஆங்கில விஞ்ஞானி தமது இளம் வயதில் ஒரு நாள் தோட்டத்திற்குச் சென்றார். அங்கு நன்றாகப் பழுத்த ஆப்பிள் ஒன்று மரத்திலிருந்து கீழே விழுவதைக் கண்டார். இது மேலே செல்லாமல் ஏன் பூமியை நோக்கியே வருகிறது என்று எண்ணிப் பார்த்தார். பல ஆண்டு