பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புள்ளியியல் லும் காணப்படும் கொக்கிப்புழுக்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. இவற்றிற்குச் சீரண உறுப்புகள் உண்டு. இவை உணவை இரத்தத்தையும், உறிஞ்சி வாழ் யும் கின்றன.3.வளையப் புழுக்கள்: புழுக்களில் இவையே வளர்ச்சியடைந்த இளமாகும். இவை பல வளையங்கள் சேர்ந்ததுபோன்ற அமைப்புள்ளவை. மண்புழு, நீரில் வாழும் அட்டை ஆகியவை இவ்வகையைச் சேர்த் தவை. புழு புழுக்களில் பெரும்பாலானவை தீங்கு விளைவிப்பனவாகும். ஈரல் புழு, நாடாப் புழு, உருண்டைப்புழு, நரம்புச் சிலந்திப் (Guinea worm), கொக்கிப்புழு முதலியவை நம் உடலுக்குள் நுழைந்து கொடிய நோய்களைத் தோற்றுவிக்கின் றன. உணவு,நீர் முதலியவற்றின் மூலம் இவை நம் உடலினுன் செல்லக்கூடும். ஆனால் கொக்கிப் புழு மட்டும் நம் பாதங் களில் உள்ள வெடிப்புகளின் வழியாக நுழைந்துவிடுகிறது. எனவே செருப்போ. வேறு காலணியோ இல்லாமல் நடப்பது நல்லதல்ல. நன்மை செய்யும் சில புழுக்களும் உண்டு. மண்புழுக்களால் பயிர்களுக்கு நன்மை விளைகிறது. இலை நிலத்தைத் துளைத்து, பயிர்களின் வேருக்குக் காற் றோட்டத்தை ஏற்படுத்துகின்றன. மண்ணி லுள்ள பலவகையான சத்துப்பொருள் களே இவற்றுக்கு உணவு. இவை மண்ணை உண்டு வெளிப்படுத்தும்போது அந்த மண் வளமுடையதாக மாறுகிறது. தாவரங் களைத் தின்று பயிர்களுக்குச் சேதம் விளை விக்கும் புழுக்களும் உண்டு. புள்ளியியல் (Statistics): கிரிக் கெட் ஆட்டத்தைப் பார்த்திருப்பீர்கள். அதில் ஒவ்வோர் ஆட்டக்காரரும் எவ்வளவு ஓட்டங்கள் எடுக்கிறார், எத்தனை விக்கெட்டுகளை வீழ்த்துகிறார் என்று கணக் கிடுவார்கள். அவ்வாறே, ஒரு நாட்டில். பல்வேறு இடங்களில் ஓராண்டின் பல் வேறு பருவங்களில் எவ்வளவு மழை பெய்துள்ளது என்பதையும் அளந்து கணக் கிடலாம். இவ்வாறு கணக்கிட்டு அறியும் விவரங்களைப் புள்ளி விவரங்கள் என்பர். இப்புள்ளி விவரங்களைச் சேகரித்து, அவற் றைப் பலவிதங்களில் ஒழுங்குபடுத்தி, விஞ்ஞான முறைப்படி ஆராய்ந்து முடிவு கள் எடுப்பதற்குப் புள்ளியியல் என்று பெயர். இது கணிதத்தின் ஒரு பிரிவாகும். புள்ளியியலின் முதற்படி, புள்ளிவிவரங் களைச் சேகரிப்பதாகும். பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் வந்துள்ள மாண வர்களைப் பதிவேட்டில் குறிக்கிறர் களல்லவா? இது ஒருவகையான புள்ளி 25 12,28,215 24,70,288 28,89,143/ 28,57,424 31,94,494 ன்னியாகு திருநெல்வேலி இராமநாதபுரம் தஞ்சாவூச் திருச்சிராப்பள்ளி தமிழ்காடு சென்னை செங்கற்பட்டு வட ஆர்க்காடு 4,11,03,125 தென் ஆர்க்காடு தருமபுரி சேலம் 8,44,901 38,32,740 மதுரை நீலகிரி- 088'16'7 கோயம்புத்தூர் 37,38,279 36,06,961 16,74,193 61 29 989'98 62 88 198 1971ஆம் ஆண்டு எடுத்த மக்கள்தொகைக் கணக்கின் படித் தமிழ்நாட்டின் மக்கள்தொகை பற்றிய புள்ளி விவரங்களை மேலே உள்ள படத்தில் காணலாம். விவரமாகும். இதிலிருந்து ஒரு குறிப்பிட்ட நாளில் பள்ளிக்கு வந்த மாணவர்களின் எண்ணிக்கையை அறியலாம். ஒரு குறிப் பிட்ட மாணவர் ஒரு மாதத்தில் பள்ளிக்கு வந்த நாட்களை அறியணம். மற்ற மாண வர்களின் வருகையுடன் ஒப்பிட்டுப் பல் வேறு விவரங்களை அறியலாம். ஒரு குறிப் பிட்ட மாதத்தில் மாணவர்களின் வருகை குறைவாக இருக்குமானால், அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கலாம். எல்லா வகுப்பிலும் நிறைய மாணவர்கள் வந்து, ஒரு குறிப்பிட்ட வகுப்பில்மட்டும் மாண வர்கள் குறைவாக வருவார்களானால், அதற்கு அந்த வகுப்பிலுள்ள வசதிக் குறைவு காரணமா அல்லது வேறு காரணமா என்பதையெல்லாம் அறிய லாம். இவ்வாறே ஓராண்டின் காலநிலை. மழை அளவுகள். பிறப்பு இறப்பு எண் ணிக்கை, மக்கள்தொகை பற்றிய புள்ளி விவரங்கள், இரும்பு, நிலக்கரிச் சுரங்கங் கள், எஃகு ஆலைகள் முதலியவற்றின் உற்பத்தி அளவு பற்றிய விவரங்கள், பயிர் விளைச்சல் அளவுகள், பயிர் நிலங்களின் பரப்பளவு, ஆடுமாடு முதலிய கால் நடைகளின் எண்ணிக்கை போன்ற புள்ளி விவரங்களை அவ்வப்போது கணக்கிட்டுப் பல பயனுள்ள விவரங்களை அறிந்து கொள்ளலாம். புள்ளிவிவரங்களை அட்டவணைகளில் கொடுக்கலாம். இந்த அட்டவணைகளைப் பார்த்துச் சில உண்மைகளை எளிதாக அறிந்துகொள்ளலாம். எடுத்துக்காட்டாக,