பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பூட்டு - பூண்டு மஞ்சள் காய்ச்சல், யானைக்கால் நோய் முதலியன பரவுகின்றன. ஈக்கள் உணவுப் பொருள்கள்மீது உட்காரும்போது உணவில் நோய்க்கிருமிகள் கலந்து காலரா, சீதபேதி ஆகியவை உண்டாகின்றன. பயிர் கனையும் வேறு பொருள்களையும் பூச்சிகள் சேதப்படுத்துகின்றன. ஆகையால் அவற்றை ஒழிக்கவேண்டும். இன்று பல வகையான பூச்சிகொல்லி மருந்துகள் இதற்குப் பெரிதும் பயன்படுகின்றன. நமக்கு நன்மைதரும் பூச்சிகளும் உள்ளன. பட்டு, அரக்கு முதலிய பொருள் களைப் பூச்சிகள் உற்பத்தி செய்கின்றன. வண்ணத்துப்பூச்சி போன்ற பூச்சிகள் மகரந்தச் சேர்க்கைக்கு (த.க.) உதவுகின் றன. பூச்சிகளுள் முக்கியமானவற்றிற்குத் தனிக் கட்டுரைகள் உண்டு. பூட்டு: வீட்டையும் வீட்டிலுள்ள மேசை, பெட்டி முதலியவற்றையும் பாதுகாப்பாக வைத்திருக்கப் பலவகைப் பூட்டுகளால் பூட்டிவைக்கிறோமல் லவா? மிகப் பழங்காலத்தில் மக்கள் தம் வீடுகளில் சுதனின் உட்புறமாக மரத்தி னாலோ உலோகத்தினாலோ செய்த ஒரு தண்டை இடமும் வலமுமாக அசை யும் வகையில் அமைத்தனர். இத்தண் டைக் கதவின் அருகிலுள்ள துளையில் செலுத்திவிட்டால், சதவைத் திறச்சு இயலாது. இத்தண்டை நகர்த்த அரிவாள் போன்று வளைந்த திறவுகோலைப் பயன் படுத்தினர். இத்தகைய அமைப்பு நாளடைவில் வளர்ச்சியுற்றுப் பலவகைகளிலும் திருத்தி யமைக்கப்பட்டு நவீன பூட்டு வகைகள் தோன்றின. இக்காலத்தில் கதவோடு நிரந்தரமாகப் பொருத்திவைக்கக்கூடிய தாழ்ப்பாள் பூட்டுகளும், வேண்டும்போது பூட்டிவிட்டுப் பிறகு தனியே எடுத்துக் 33 கொள்ளக்கூடிய (Padlock) தயாரிக்கப்படுகின்றன. கொண்டிப்பூட்டுகளும் பூட்டுகளில் இன்று எத்தனையோ வகை கள் இருக்கின்றன. அவற்றில் காலப்பூட்டு (Time-lock) என்பதும் ஒன்று. இது ஒரு குறிப்பிட்ட நேரத்தில்தான் திறக்கும். இது மிகவும் பாதுகாப்பாளது. எனவேல இதைக் தங்கக் கட்டிகள் போன்ற விலையுயர்ந்த பொருள்களைப் பாதுகாத்து வைக்கும் நிலவறைகளிலும் (Vaults), வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை வைக்கும் அறைகளிலும் பயன்படுத்துகிறார்கள். பூட்டுத் தயாரிப்பு இப்பொழுது எல்லா நாடுகளிலும் ஒரு முக்கியத் தொழிலாக விளங்குகிறது. இந்தியாவில் கான்பூர், அலிகார், திண்டுக்கல் முதலிய இடங்களில் தயாராகும் பூட்டுகள் புகழ்பெற்றவை. பூண்டு: இந்தியாவில் நெடுங்கால மாக உணவுப்பொருள்களுக்குக் காரமும் சமையலில் மணமும் சுவையும் ஊட்ட பூண்டு சேர்க்கப்படுகிறது. இதை வெள்ளைப் பூண்டு. வெள்ளுள்ளி, காயம் என்றும் சொல்வார்கள். இது வெங்காய இனத் தைச் சேர்த்தது. வெங்காயத்தைவிடப் பூண்டில் காரமும் மணமும் அதிகம். பூண்டு நட்டபின் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் பலன் தரும். களிமண் கலந்த குறுமண்ணில் பூண்டு நன்கு பயிராகும். நீர் தேங்காமல் தன்கு வடிந்துவிடக்கூடிய நிலமாக இருக்கவேண்டும். இதனால் மலைச் சாரல்களில் இது நன்கு வளரும். இது வளரும் பருவத்தில் தட்பமும் சரமுமான நிலை வேண்டும். பயிர் முற்றும்போது நிலம் சற்று உலர்ந்து இருக்கவேண்டும். விதையை நட்டதும், இதன் தண்டு தரையின்கீழ் வளர்ந்து அதில் பல சிறு பூண்டுகள் கொத்தாக உண்டாகும். பூட்டுகளில் சிலவகை T கதவுடன் பொருத்திவைக்கக் கூடிய பூட்டு கொண்டிப் பூட்டு சைக்கிள் பூட்டு