பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

42 பெரு - பெருச்சாளி ஒரு பொருளிலிருந்து வரும் பிம்பம் நீர்மட்டத்திற்குமேல் உயர்ந்திருக்கும் மேல் முனையில் உள்ள ஆடியில் முதலில் படும். அது அங்கிருந்து பிரதிபலிக்கப் பட்டு நேராகக் கீழே உள்ள ஆடியில் விழும். அப்போது கீழ்முனையுடன் பொருந்தியுள்ள கண் வில்லை (Eye-piece) மூலம் மேலே உள்ள பொருள் கண்ணுக் குத் தெரியும். இன்றைய பெரிஸ்கோப்புகளில் டகங்களும் (Prisms) பட் லென்ஸ்களும் பொருத்தப்படுகின்றன. இதனால் நீர்ப் பரப்புக்குமேலே தொலைவிலுள்ள ஒரு பொருளைத் தெளிவாகவும், பெரிதாகவும் காணமுடி கின்றது. தொலைநோக்கியில் (த.க.) காண்பது போன்று லென்ஸ்கள் பிம்பத்தைப் பெரிதாக்கிக் காட்டுகின்றன. நீர்மூழ்கிக் கப்பல்களில் பெரிஸ்கோப் குழலின் மேற்பகுதி மிகக் குறுகலாகவே இருக்கும். எனவே இக்குழல் நீர்மட்டத் திற்குமேல் நீண்டிருந்தாலும், இதை எளிதில் கண்டுகொள்ள முடியாது, சில விநாடிகள் இதை வெளியே நீட்டிவிட்டு மீண்டும் உள்ளே இழுத்துக்கொள்ளலாம். பெரு (Peru) : தென் அமெரிக்காக் கண்டத்தில் மேற்குக் கரையிலுள்ள நாடு பெரு.பரப்பு 12,85,000 சதுர கிலோ மீட்டர். மக்கள்தொகை 1,24,86,000 (1967). இந்நாட்டின் தலைநகர் லீமா. இந்நாட்டின் கடற்கரையையொட்டி ஆண்டீஸ் மலைத்தொடர் செல்கிறது. மலையிலுள்ள பல சிகரங்கள் மிக உயர மானவை; எப்பொழுதும் இவற்றைப் பனி மூடியிருக்கும். ஆண்டீஸ் மலைக்கும் கடலுக்கும் இடையே மேற்குப் பகுதியில் உள்ள சமவெளி மிகவும் குறுகியது: வளமற்றது. உலகின் மிகப் பெரிய ஆறு களில் ஒன்றான ஆமெசான் (த.க.) பெரு நாட்டில் தோன்றிக் கிழக்கு நோக்கிப் பாய்கிறது. ஆறு பாயும் கிழக்குச் சமவெளியில் அடர்ந்த காடுகள் உள்ளன. 'ஈக்வடார் பசிபிக் கொலம்பியா ஆமெசான் பெரு லீமா கேள் சமுத்திரம் பிரேசில் சில் பருத்தி சர்க்கரை செம்பு எண்ணெய் பெரு எல்லையில் தென் பெரு நாட்டின் டிட்டிக்காக்கா என்னும் மிகப் பெரிய ஏரி உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து உள்ளது. மீட்டர் உயரத்தில் 3,800 உலகில் மிக உயரமான இடத்திலுள்ள ஏரி இதுவேயாகும். இந்நாட்டில் பயிரிடத் தக்க நிலப்பரப்பு மிகக் குறைவு என்றாலும் உழவுத்தொழிலே முதன்மையாக உள்ளது. பருத்தி, நெல், கரும்பு. கோதுமை, புகையிலை, காப்பி, உருளைக் கிழங்கு முதலியன விளைகின்றன. கால் நடை வளர்த்தலும் மீன் பிடித்தலும் இங்கு மற்ற முக்கியத் தொழில்கள். ஒட்டக இனத்தைச் சேர்ந்த லாமா, அல்பாக்கா என்னும் விலங்குகள் இங்கு வளர்க்கப்படுகின்றன. இவை பொதி சுமக் சுப் பயன்படுகின்றன. தங்கம், வெள்ளி, செம்பு, காரீயம், துத்தநாகம். இரும்பு முதலிய உலோகங்கள் இங்குக் கிடைக் கின்றன. நிலக்கரி, பெட்ரோலிய எண்ணெய் ஆகியனவும் கிடைக்கின்றன. உலகிலேயே மிக அதிகமான உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள ரெயில்பாதையும் சாலையும் இந்நாட்டின் ஆட்சிமொழி மொழியாகும். முக்கிய மதம், கத்தோ லிக்கக் கிறிஸ்தவம். இந்நாட்டில்தான் உள்ளன. ஸ்பானிய 16ஆம் நூற்றாண்டில் இங்கு ஸ்பெயின் நாட்டினர் குடியேறினர். இங்குச் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த வாழ்ந்து வந்த இன்கா (த.க.) மக்களை ஸ்பானியர்கள் வென்று தம் ஆட்சியை நிலைநாட்டினர். ஸ்பானிய ஆட்சி 300 ஆண்டுகள் நீடித்தது. 1824-ல் பெரு சுதந்தரம் பெற்றது. இப்பொழுது இது ஒரு குடியரசு நாடு. பெருச்சாளி: வீட்டுச் சுவர்களின் அடியிலும், தோட்டத்திலும், சாக்கடை களுக்கு அருகிலும் வளை தோண்டி வாழும் பிராணி பெருச்சாளி, இது குட்டி போட் டுப் பாலூட்டும் பாலூட்டிகளில் (த.க.) ஒன்று. இது எலி (த.க.) இனத்தைச் சேர்ந்த ஒரு கொறிக்கும் பிராணியாகும். உருண்டையான தலையும், வட்டமான காதுகளும், குட்டையான அகன்ற முன் முகமும் உண்டு, வால் நீங்கலாக இது சுமார் 30 சென்டிமீட்டர் நீளமுள்ளது. உணர்ச்சி வசப்பட்டாலோ, திடீரென்று எவரேனும் எதிர்ப்பட்டாலோ இது உரோமத்தைச் சிலிர்த்துக்கொண்டு உறுமும். இது பகல் முழுதும் வளையில் தங்கியிருந்து இரவில் இரைதேட வெளியே வரும். வீட்டிலிருந்து எறியப்படும் தானியங்கள், காய்கறிகள்' முதலிய வற்றைத் தின்னும், மற்றும் சிறிய பிராணி