பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொம்மை பொம்மைகளுக்குப் பெயர் பெற்றவை. சரசுவதி, இலக்குமி, சிவன், கிருஷ்ணன் முதலிய கடவுள்கள், காந்தி, நேரு முதலிய தலைவர்கள். யானை, நாய் முதலிய விலங்குகள் ஆகிய பொம்மைகளைச் செய்து அழகாக வண்ணம் தீட்டுகிறார்கள். இவை தவராத்திரி விழாவின்போது கொலு வைக்கப்படுகின்றன. தென்னிந்தியாவில் ஆந்திரப் பிரதேசத் தைச் சேர்த்த கொண்டப்பள்ளியில் செய் யப்படும் பொம்மைகள் பல வெளிநாடு க ளி லுள்ள பொருட்காட்சிசாலைகளில் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் அம்பாரி யானை, புலி, ஒட்டகம், பசுவும் கன்றும். கோலாட்ட நடனம், தசாவதாரப் பொம் மைகள் குறிப்பிடத்தக்கவை. திருப்பதியி லும், திருக்காளத்தியிலும் மரப்பொம்மை கள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. விசாகப்பட்டினத்திலுள்ள எட்டிக்கோ பத்தா என்ற ஊரிலும், மைசூர் மாநிலத் திலுள்ள சென்னப்பட்டணம் என்ற ஊரிலும் கடைசல் எந்திரத்தைக் கொண்டு மென்மையான மரத்தில் (Soft Wood) ரெயில் எஞ்சின், கிலுகிலுப்பைகள், பழங்கள் முதலியன செய்து சாயங் கலத்த வார்னிஷ் பூசிப் பளபளப்பான தோற்றமுடைய தாக்குகிறீர்கள். சென்னையிலும், நிருவனந்தபுரத்திலும் ஆடும் குதிரை ஆடும் அன்னம், மோட் டார் கார் முதலிய பொம்மைகள் செய் கிறார்கள். தலையை ஆட்டும் மயில், மான், பாம்பு, பூனை போன்ற பொம்மைகளையும் செய்கிறார்கள். சென்னையை அடுத்த கிண்டியில் பொம்மைகளைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்தியாவிலும் பொம்மைத் தொழில் மிகவும் முன்னேற்ற மடைந்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் அம் மாநிலத் திற்கே தனிச்சிறப்பான பொம்மைகளைக் காணலாம். வட 15ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் மரப்பொம்மைகளைச் செய்து வந்தனர். பின்னர் இது அமெரிக்கா முதலிய நாடு மரப் பொம்மை பிளாஸ்ட்டிக் பொம்மை ரப்பர் பொம்மை பீங்கான் பொம்மை துணிப் பொம்மை களுக்குப் பரவியது. 19ஆம் நூற்றாண்டில் தலையாட்டிப் பொம்மை இத்தாலியில் அழகிய பொம்மைகளைச் செய்தனர். சினவில் பீங்கான் பொம்மை களைச் செய்துவந்தனர். பிரான்ஸ் நாட் டிலும் பொம்மைத் தொழில் வளர்ச்சி யுற்றது.இன்று பொம்மைத் தொழிலில் ஜப்பான் தலைசிறந்து விளங்குகிறது. மரம். களிமண், உலோகங்கள், அட்டை, காகிதம், துணி, ரப்பர், செலு வாயீடு. பிளாஸ்ட்டிக் போன்ற பல பொருள்களால் இன்று உலகெங்கும் பல அழகிய பொம்மைகள் செய்கிறார்கள். மண் பொம்மை