பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

86 மரச் சாமான் ஆஸ்திரேலியா தவிர உலகெங்கும் மரங் கொத்தி வாழ்கிறது. இப்பறவையில் பல இனங்கள் உண்டு. இந்தியாவில் சாதாரண மாகத் தோட்டங்களிலும் தென்னந் தோப்புகளிலும் காணப்படும் அழகிய மரங்கொத்திப் பறவை, மைனாவைவிடச் சற்றுப் பெரிதாக இருக்கும். இதன் முதுகு பொன் நிறமானது: கொண்டை பாகவும் முகம் கருநிறமாகவும் இருக்கும். மற்றோர் இனம் இதைவிடச் சிறியது. இதன் முதுகு, கருப்பு, வெள்ளை நிறப் புள்ளிகள் கலந்ததாக இருக்கும். சிவப் மரத்தைக் கொத்தித் துளைப்பதற்கேற்ப ப்பறவையின் அலகு கூர்மையாகவும் உறுதியாகவும் இருக்கும். மரப்பட்டை களுக்கு அடியிலும் துளைகளிலும் ஒளிந்து கொண்டிருக்கும் புழு பூச்சிகளைப் பிடித்து இழுப்பதற்குத் தக்கபடி இதன் நாக்கு நீளமாகவும் பிசுபிசுப்பான பசையுள்ள தாகவும் இருக்கும். மரங்களுக்குக் கேடு விளைவிக்கும். புழு பூச்சிகளைத் தின்று தாவர இனத்திற்கு மரங்கொத்தி உதவி செய்கிறது. இப்பறவையின் கால் விரல்கள், முன்பக்கம் இரண்டும் பின்பக்கம் இரண்டு மாக அமைந்திருக்கும். மரப்பட்டைகளில் தொற்றிக்கொள்ள விரல் நகங்கள் உதவு கின்றன. மரங்கொத்தியின் வால் இறகு கள் குட்டையானவை; நுனி கூராக இருக் கும். மரங்கொத்தி செங்குத்தாக உட்காரும்போது இவ்வால் இறகுகள் மரப்பட்டையில் பதிந்து பறவை தலை கீழாக விழாதபடி தாங்குகின்றன. இரவி லுங்கூட இதே நிலையில் மரங்கொத்தி உட்கார்ந்து தூங்கும்! இறக்கையை விரிக் காமல் மரத்தில் விரைவாக ஏறி இறங்கும் திறன் இதற்கு உண்டு. மரச் சாமான்: மேசை, நாற்காலி, அலமாரி, கட்டில் முதலிய மரக் சாமான் சுனை நாம் பயன்படுத்துகிறோம். மனிதன் வீடுகட்டி நிலையாக வாழத் தொடங்கிய காலம் முதல், தனக்கு வேண்டிய பொருள் கள் பலவற்றைச் செய்ய மரத்தைப் பயன் படுத்தி வந்திருக்கிறாள். வீடு, அரண்மனை, கோயில், ஊர்திகள், கருவிகள், ஆயுதங் கள் இன்னும் பல பொருள்களும் மரத் தாலேயே செய்யப்பட்டன. தச்சர்கள் மரச்சாமான்களைச் செய்து வந்தனர். தமிழ் இலக்கியங்களிலும் கல்வெட்டுகளி லும் தச்சர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. வீடுகளிலும் மரத்தூண்கள், வீட்டு முகப்புகள் முதலியவற்றை மரத்தால் அமைத்தார்கள். காலப்போக்கில்மரவேலை ஓர் அழகுக் கலையாயிற்று. அரசருக்கு JED E வீடுகளில் இன்று நாம் பயன்படுத்தும் மரச் சாமான்களில் சில