பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சூரியகாந்தி மலர் - மலேசியா இருக்கும். சில பூக்களில் சூலகங்கள் மட்டும் காணப்படும். தென்னையில் இரு வகைப் பூக்களும் உண்டாகும். பனைமரங் கனில் வெவற்றில் கேசரங்கள் மட்டுமே தோன்றும். இவை ஆண்பனை எனப் படும். இவற்றில் காய்கள் காய்ப்பதில்லை. சில பனைகளில் குலகம் மட்டுமே தோள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விளக்கு 93 றும். இவை பெண்பனைகள் எனப்படும். இவற்றில் காய்கள் உண்டாகும். மலர்கள் தோட்டங்களையும், திறந்த வளிகளையும் அழகுபடுத்துகின்றன. அவற்றின் தறுமணம் சூழ்நிலையை இன்ப மயமாக்குகின்றது. பறவைகள், தேனீக் கள், பூச்சிகள் முதலியவற்றுக்கு உணவாகிய தேனைப் பூக்கள் அளிக்கின் றன். திருமணம். கடவுள் வழிபாடு முதலியவற்றில் மலர்கள் பயன்படு கின்றன. மலேசியா: ஆசியாக் கண்டத்தின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள சுதந்தர நாடு மலேசியா. மலேயா தீபகற்பமும் போர்னியோ தீவிலுள்ள சராவாக், சபா பகுதிகளும் இந்நாட்டில் அடங்கும். இந் நாட்டின் மொத்தப் பரப்பு 3.32,300 சதுர கிலோமீட்டர் மக்கள்தொகை 1,04,34,000 (1970). மலேயா தீபகற்பத்தை மேற்கு மலேசியா என்பர். சராவாக், சபா ஆகியவை கிழக்கு மலேசியா எனப்படும். இரு பகுதிகளுக்கும் இடையே தென் சீனக் கடல் உள்ளது. மூன்று பகுதிகளுமே மலைப்பாங்கானவை. பூமத்திய ரேகைக்கு அருகிலிருப்பதால் வெப்பமும் மழையும் இங்கு அதிகம். அடர்ந்த காடுகள் வளர்ந் துள்ளன. ரப்பர்த் தோட்டங்கள் மிகுதி. உலகில் சப்பர் அதிகமாகப் பயிராகும் நாடுகளுள் மலேசியா முதலிடம் பெறு கிறது. இத்தாட்டில் மிகுதியாக விளையும் தானியம் நெல். வாழை, அன்னாசி ஆகிய பழங்கைகளும் தேயிலை, புகையியை, மினகு, சவ்வரிசி முதலியனவும் பயிரிடப்படுகின் றன. தென்னை மரங்கள் மிகுதி, காடுகளில் யானை, புலி,சிறுத்தை, காண்டாமிருகம், மலைப்பாம்பு முதலியன வாழ்கின்றன. சதுப்பு நிலங்களில் முதலைகள் அதிகம். வௌவால் இனத்தைச் சேர்ந்த பறக்கும் அணில் போன்றவையும் இங்குக் காணப் படுகின்றன. மலேசியாவில் வெள்ளீயம் அதிகமாகக் கிடைக்கிறது. இது இந்நாட்டின் மிக முக்கியமான ஏற்றுமதிப் பொருளாகும். உலக உற்பத்தியில் 40 சதவீதம் இந்நாட் டிலிருந்தே கிடைக்கிறது. இரும்பு, தங்கம் முதலியனவும் கிடைக்கின்றன. சராவாக் பகுதியில் பெட்ரோலிய எண்ணெய் மிகுதி யாகக் கிடைக்கிறது. மக்களில் பெரும்பாலோர் மலேயர்கள். ஐரோப்பியர்கள், சீனர்கள், இந்தியர்கள். பாக்கிஸ்தானியர்கள் ஆகியோரும் உள்ளனர். சராவாக், சபா பகுதிகளில் ஆதிக்குடிகள் வாழ்கின்றனர். இந்நாட் டில் ஆங்கிலமும் மலாய் மொழியும் ஆட்சி