பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

கேள்வியும்

ஆதலால் குளத்தில் கல்லை எறிந்ததும் அசையாமல் நின்று ஜலம் அசைக்கப்படுகிறது. அதனால் அலை உண்டாகிறது. அது அடுத்து நிற்கும் ஜலத்தை அசைத்து அலை உண்டாக்குகிறது. இவ்விதமான அலைகள் உண்டாகின்றன. ஏதேனும் அவைகளைத் தடுக்கும்வரை ஒன்றின் மேல் ஒன்றாக விரிந்துக்கொண்டே போகின்றன. இறுதியில் கரைக்கு வந்ததும் கரை அவைகளைத் தடுத்து நிறுத்தி விடுகிறது. அலைகள் ஓயந்து விடுகின்றன.

245 அப்பா! ஸைக்கிள் ஓடும்பொழுது மட்டும் நட்டமாக நிற்கிறது. அதற்குக் காரணம் என்ன?

தம்பி! ஸைக்கிள் வண்டி ஓடாதபொழுது சாய்ந்து விடுகிறது. ஓடும்போது சாயாமல் இருக்கிறது. ஓடும்பொழுது கூட வேகமாக ஒடினால்தான் சாய்வதில்லை. வேகம் குறைந்துவிட்டால் சாய ஆரம்பித்து விடுகிறது அதனால் ஓட்டம் தான் அதைச் சாய்ந்து விழாமல் செய்கிறது, என்பது விளங்கும். எந்த வஸ்துவும் ஓட ஆரம் பித்துவிட்டால் வேறு ஏதேனும் தடுக்கும் வரை அப்படியே ஓடிக்கொண்டிருக்கும். இது நியூட்டன் கண்டு பிடித்த இயற்கை விதி. அதனால் ஸைக்கிள் ஓட ஆரம்பித்து விட்டால் அதை நாம் ஓடாமல் நிறுத்தும்வரை சாயாமல் ஓடிக்கொண்டே இருக்கும். தம்பி! நீங்கள் இரும்பு வளையம் ஓட்டுகிறவர்கள். பம்பரம் சுழற்றி விடுகிறவர்கள். அப்பொழுது வளையமும் பம்பரமும் சாய்ந்து விழாமல் இருக்கிறதே. அதற்கும் அதே காரணம்தான்.

246 அப்பா! பாதரசம் ஒடாமல் பந்துக்கள்போல் உருள்கிறதே, அதற்குக் காரணம் என்ன? தம்பி! எந்த வஸ்துவும் தனி வஸ்துவன்று, ஏராளமான அணுக்கள் சேர்ந்தாகும். அந்த அணுக்களுக்கு ஒன்று சேர்ந்து இருக்கும் ஆசை இருப்பதால்தான், அவை