பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

கேள்வியும்


இல்லாமல் இருந்தால் இரவு போல பகலிலும் வானம் கறுப்பாகவே தோன்றும்.

ராலிப்பிரபு என்னும் அறிஞர் இன்னுமொரு காரணமும் கூறுகிறார். காற்று என்பது ஒரு தனி வஸ்து அன்று. அதில் பல வாயுக்கள் உள. அவற்றுள் நீல நிறமான ஹைட்ரோஜன் என்பது ஒன்று. வாயுவினூடு பார்ப்பதாலும் வானம் நீலமாகத் தெரிகிறது என்று கூறுகிறார்.

2 அப்பா! வானம் தெரிகிறதே, அதை எது தாங்கிக் கொண்டிருக்கிறது?

தம்பி! வானம் என்று ஒன்று கிடையாது. அதனால் அதைத் தாங்கவேண்டிய அவசியமில்லை. காற்றில் எங்கும் தூசிகள் மிதந்து கொண்டிருக்கின்றன. அந்தத் தூசிகள் மீது சூரியவொளி விழும்பொழுது அவை அதிலுள்ள நீல நிறக் கதிர்களை மட்டும் கிரகியாமல் நமக்கு அனுப்புகின்றன. அல்விதம் சூரியஒளி தூசிகளின் மீது பட்டு வருவதைக் கொண்டுதான் நீல நிறமான வானம் ஒன்று நம்மீது கவிந்திருப்பது போல எண்ணிக் கொள்கிறோம். காற்றும் சுமார் 50 மைல் தூரம் வரை தூசிகள் உடையதாக இருப்பதால் வானம் ஏதோ கனமான வஸ்துபோலத் தெரிகிறது. அதனால் தான் நீயும் வானத்தை எது தாங்குகிறது என்று கேட்கிறாய்.

3 அப்பா நீலமாகத் தெரிகிறதே வானம், அது இங்கிருந்து எவ்வளவு துரத்தில் இருக்கிறது?

தம்பி! வானம் என்று ஒரு வஸ்து இல்லை. காற்றிலுள்ள தூசிகள் சூரிய ஒளியிலுள்ள மற்ற நிறக் கதிர்களைக் கிரகித்துக்கொண்டு நீலநிறக் கதிர்களை மட்டும் நம்முடைய கண்களுக்கு அனுப்புகின்றன. அதனல் நமக்கு மேலே பார்த்தால் நீலமாகத் தெரிகிறது. அதைத்தான் நீலவானம் என்று கூறுகிறோம். அப்படி நீலமாகத் தோன்றும் காற்று