பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

கேள்வியும்

5 அப்பா! வெயில் சுடுகிறதே, அடுப்பில் எரிவது போலத் தான் அங்கே சூரியனிலும் எரிகிறதோ? தம்பி! அடுப்பில் விறகு வைத்து எரிக்கிறோம். விறகு என்பது என்ன? அதில் கரிதான் பிரதானம். அநதக் கரி காற்றிலுள்ள பிராணவாயுவோடு சேர்கிறது. அப்படிச் சேர்வதைத்தான் விறகு எரிவதாகக் கூறுகிறோம். அப்படி எரியும்போது உஷ்ணம் உண்டாகிறது.

ஆனால் சூரியனுடைய உஷ்ணம் அபபடி உண்டாக வில்லை. அடுப்பு மாதிரி எரிய அங்கே காற்று கிடையாது. அங்கே கால்ஸியமும் கரியும் ஒளி விடுகின்றன. ரேடியம் போன்ற சுயம்பிரகாசமான வஸ்துக்களும் உள. ஹீலியம் என்னும் வஸ்துவின் அணுக்கள்தான் பலவிதமாக மோதிப் பல வஸ்துக்களை உண்டாக்குகின்றன. அந்த மோதல்களாலும் உஷ்ணம் உண்டாகின்றது. ஆகவே சூரியனில் இந்தக் காரணங்களால்தான் உஷ்ணம் உண்டாகி வெயில் சுடுகிறது. அங்கே அடுப்பில் எரிவதுபோல எரிவதில்லை.

6 அப்பா! சூரியன் பளபளவென்று எரிகிறதே; ஆனால் அது என்றேனும் அணைந்து போகுமோ?

ஆமாம், அதில் சந்தேகமில்லை. சூரியன் சதாகாலமும் உஷ்ணத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறது. அதனால் அதிலுள்ள உஷ்ணம் நாளடைவில் குறைந்துபோகும். அதற்கு எவ்வளவு உஷ்ண நஷ்டம் உண்டாகிறதோ அவ்வளவு உஷ்ண லாபம் வேறு வழியில் உண்டாகுமானால், எப்பொழுதும் இப்பொழுதுள்ளது போலவே எரிந்து கொண்டிருக்கும். அதற்கு வெளியிலிருந்து உஷ்ணமும் எரியக்கூடிய வஸ்துக்களும் வந்து சேரத்தான் செய்கின்றன. வால் நட்சத்திரத் துண்டுகள் பூமியில் வந்து விழுவது போலவே, தினந்தோறும் ஏராளமாகச் சூரியனிலும் வந்து விழுகின்றன. அதைப்போன்ற சூரியன்களாகிய