இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பையன்
பழங்கள் நிறையத் தருகிறேன்;
பசியைத் தீர்க்க வா, வா.
துளியும் கெடுதல் செய்திடேன்.
துணிந்தே அருகில் வா, வா.
பச்சைக் கிளி
பறந்து சென்று வேண்டிய
பழங்கள் தின்பேன் போ, போ
பிறரின் கையைப் பார்த்துநான்
பிழைப்பதில்லை போ, போ.
26