உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


பையன்

ரயிலில் ஏறிச் சென்றி ருந்தால்
நன்மை யாகுமே ?

ஆமையார்

நடுவ ழியில் கவிழ்ந்து போனால்
நாச மாகுமே !

பையன்

சரி, சரி, என் சைக்கிள் பின்னால்
ஏறிக் கொள்ளுவீர்.
சரச ரென்றே ஓட்டிடுவேன்
விரைவில் செல்லுவீர்.

ஆமையார்

(தம்பி, நீயோ சின்னப் பையன்,
தாறுமாறாக ஓட்டி, யார் மேலேயாவது
மோதிவிட்டால்...?
வேண்டாம், வேண்டாம்.)

போலீஸ்காரர் பிடித்துக் கொள்வார்
இரண்டு பேரையும்.
போதும், போதும், நடந்தே செல்வேன்.
வணக்கம் அப்பனே !

6