பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காசிக்குத்தாத்தாவும் சென்றுவந்தார்- உடன் களிப்போடுபிள்ளைகள்சூழ்ந்துகொண்டார். ஆசையாய்க் கூடியே பேசுகையில்- அங்கே ஆனந்தன் தாத்தாவைக் கேட்கலுற்றான்.</poem>

"அத்தையும் காசிக்குச் சென்றுவந்தாள்-இனி
அவரைக்காய் தின்பதே
இல்லையென்றாள்.
சித்தப்பா காசிக்குச் சென்றுவந்தார்-இனி
சிகரெட் பிடிப்பதே இல்லையென்றார்.

<poem>பாட்டியும் காசிக்குச் சென்றுவந்தாள்- இனி பாகற்காய் தின்பதே இல்லையென்றாள். சீட்டாடும் பழக்கத்தை விட்டேனென்றார்-காசி சென்றுதிரும்பியமாமாவுமே<poem>

<poem>இப்படிக் காசிக்குச் சென்றோரெல்லாம் -அங்கே ஏதேனும்ஒன்றினைவிட்டுவந்தார். அப்படி நீயுமே விட்டதென்ன?-தாத்தா, அவசியம்கூறிடவேண்டு" மென்றான்.


              32