பக்கம்:குழந்தை உலகம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vii

 தொகுத்து அனுப்பி வருகிறார்கள். இவர்களுள் மிக முக்கியமானவர் சகோதரி ஸ்ரீமதி ஏ. கே. செல்லம்மாள் அவர்கள். எந்த விதமான நன்றியையும் எதிர்பாராமல் நாடோடிப் பாடல்களில் உள்ள விருப்பமும் என்பாலுள்ள சகோதர அன்பும் தூண்ட, எந்த ஊருக்குச் சென்றாலும் தமக்குக் கிடைக்கும் பாடல்களைத் தொகுத்து அனுப்புவதில் அவர்களுக்குச் சலிப்பே இருப்பதில்லை. அவர்களுடைய உண்மை அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யவல்லேன்! என் அன்பின் அறிகுறியாக இந்தப் புத்தகத்தை அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.

15-3-52

கி. வா. ஜகந்நாதன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/8&oldid=1046878" இலிருந்து மீள்விக்கப்பட்டது