பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருகூடசுந்தரம்

59

களை அதிகமாகச் சாப்பிடாமலிருப்பதே ஆரோக்கியமானது. பாலும், மோரும், பழச்சாறும், இளநீருமே எல்லோர்க்கும் நல்ல பானங்கள்.

பாப்பா:- அப்பா! நல்ல குழந்தைகள் பெறுவதற்கு வேறு என்ன செய்ய வேண்டும்?

அப்பா:- அவைகளைச் சொல்லுகிறேன் கேள்.

1. நாங்கள் தூங்குவதைவிட நீங்கள் குழந்தைகள் அதிகமாக தூங்க வேண்டும். அதனுல் இரவில் அதிக நேரம் கண்விழிக்கக் கூடாது. 9-மணிக்குப் படுத்து, காலை 6-மணிக்கு எழுந்திருப்பது நல்லது. நீங்கள் நன்றாக காற்று வீசுமிடத்திலேயே உறங்க வேண்டும். குளிராயிருந்தால் போர்த்திக்கொள். ஜன்னலையும் மூடாதே; முகத்தையும் மூடாதே. எப்போதும் மல்லாந்து படுக்காதே, ஒரு பக்கமாகச் சாய்ந்தே படு. எப்போதும் மூக்கிலேயே சுவாசிக்க வேண்டும். உண்ணும் பொழுதும் பேசும்பொழுதும் தவிர மற்றக் காலங்களிலெல்லாம் வாயை மூடியே வைத்துக்கொள். காலையில் கண் விழித்தவுடனேயே எழுந்து விட வேண்டும். சில குழந்தைகள் விழித்த பிறகும் படுத்துக் கொண்டிருப்பது தீயாதாகும்.

2. காலையில் விழித்தவுடன் கண்ணையும் வாயையும் சுத்தம் செய்துகொண்டு ஒரு டம்ளர் ஜலம் குடிக்க வேண்டும். இரவிலும் தூங்கப்போகுமுன், ஜலம் பருகுதல் நல்லது. அப்படிச் செய்தால் மலச்சிக்கல் உண்டாகாது. காலையில் மலங்கழிக்கத் தவறாதே. குறித்த நேரத்தில் மலங்கழிக்கப் பழகிக் கொள்ளுதல் அவசியம்.

3. பல்லை நறாகத் துலக்கு. மெதுவான பற்பொடியும் வேப்பங்குச்சி, வேலங்குச்சி போன்ற குச்சிகளுமே நல்லது. பிரஷும் பேஸ்டும் அனாவசியம். அவற்றைவிடச் சாதாரண உப்பைப் பொடித்துப் பல்லிலும் ஈரிலும் தேய்த்தல் மிக நல்லதாகும். எதைச் சாப்பிட்டாலும் எதைக் குடித்தாலும் அதற்கு முன்னும் பின்னும் வாயை நன்றாகக்