உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தை செல்வம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயற்கை இன்பம்

19


அம்புயம் வாடித் தளர்ந்ததம்மா! - அயல்
      ஆம்பலும் கண்டு களிக்குதம்மா!
இம்ப ருலகின் இயல்பிதம்மா! - மதிக்கு
      இன்னார் இனியாரும் உண்டோ அம்மா? 3

மாற்றம் உலகின் இயற்கையென - இங்கு
      மாந்தரும் கண்டு தெளிந்திடவோ,
போற்றும் இறைவன் இம் மாமதியம் - விண்ணில்
      பூத்து நிலவ விதித்தனனே! 4

அம்புலிக் கூட்டில் முயல்வருமோ? - ஈதோர்
      அண்டப் புளுகோ? அறியேன், அம்மா!
பம்பி யெழுமலை அங்குளதும் - மேலைப்
      பண்டிதர் கண்ட கனவே, அம்மா! 5

கூனக் கிழவி நிலவினிலே - ராட்டில்
      கொட்டை நூற்கும்பணி செய்வதைஇம்
மாநிலம் கண்டு மகிழ்ந்திடவே - காந்தி
      மாமதி யோங்கி வளருதம்மா! 6

சின்னஞ் சிறுவில்லாய்க் கணடதம்மா! - பின்னர்
      செம்பொற் குடம் போலே தோன்றுதம்மா!
என்ன அதிசயம் பாராயம்மா!-ஈதோர்
      இந்திர சாலமோ கூறாயம்மா! 7

வளர்ந்து வளர்ந்து பெருகுதம்மா!
      வட்டந் திருந்தி வருகுதம்மா ! - உடல்
தளாந்து தளர்ந்துபின் போகுதம்மா!- கண்ணில்
      சற்றுந் தெரியாமல் ஆகுதம்மா! 8

பாலாழி மீது படர்ந்தவெண்ணெய் - ஒரு
      பந்தா யுருண்டு திரண்டதுவோ?
மேலா யுலகில் ஒளிசெயவே - ஈசன்
      விண்ணக மிட்ட விளக்கிதுவோ? 9