இயற்கை இன்பம்
21
பந்தடிப்போம் உன்னையென்று, வெண்ணிலாவே! - நீயும்
யாரில்வர, அஞ்சினையோ? வெண்ணிலாவே!
7
பளிங்குபோலும் உன்னுருவில், வெண்ணிலாவே! - கறை
பற்றியே இருப்பதேனோ? வெண்ணிலாவே!
8
பூமியின் உருநிழலோ? வெண்ணிலாவே! - அது
போகாக் குறுமுயலோ? வெண்ணிலாவே!
9
குன்றும் குகைகளுமோ? வெண்ணிலாவே! - அன்றிக்
கூனக் கிழவிதானோ? வெண்ணிலாவே!
10
ஆழியும் நீ வரக்கண்டு, வெண்ணிலாவே! - குதித்து
ஆடுவதெக் காரணமோ? வெண்ணிலாவே!
11
ஆதாரம் ஒன்றில்லாமல், வெண்ணிலாவே! நீயும்
அந்தரத்தில் நிற்பதேனோ? வெண்ணிலாவே!
12
சுற்றித் திரிவதும் ஏன்? வெண்ணிலாவே! - உனக்குச்
சொந்த இடம் ஒன்றிலையோ? வெண்ணிலாவே!
13
அண்டிவாராய் நீ யெனினும்,வெண்ணிலாவே! - இன்னும்
அகன்றெங்கும் போய்விடாதே, வெண்ணிலாவே!
14
பறக்கச் சிறகிருந்தால், வெண்ணிலாவே! - உன்றன்
பக்கம்வந்து சேருவேனே, வெண்ணிலாவே!
15
பால்போல் நிலவெறிக்கும் வெண்ணிலாவே! - என்றன்
பாங்கில்விளை யாடவாராய்! வெண்ணிலாவே!
16
பாங்கில்விளை யாடவந்தால், வெண்ணிலாவே-நல்ல
யால்தருவேன், பழந்தருவேன், வெண்ணிலாவே!
17