உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தை செல்வம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


24. மலர்கள்-II

மண்ணி லிருந்து பொருள்வரினும் - அதை
      மாற்றி மணம்பெறச் செய்திடுவோம்;
கண்ணுக் கினிய நிறங்களெல்லாம் - விண்ணிற்
      காணுங் கதிரிடம் பெற்றிடுவோம். 1

வண்டின் வரவெதிர் பார்த்துநிற்போம் - நல்ல
      வாசனை வீதியில் வீசிநிற்போம்;
உண்டு களிக்க மது அளிப்போம் - சற்றே
      உட்காரப் பீடமும் இட்டுவைப்போம். 2

மங்கைய ரோடு குமரரையும் - மனம்
      வாய்த்த மணஞ்செய்து வாழவைப்போம்;
தங்கமும் பொன்னும் மணிகளுமே - எம்மைத்
      தாழ்ந்து வணங்கமேல் தங்கிடுவோம். 3

ஈசன் அடியில் பணிந்திருப்போம் - அவர்
      ஏந்து முடிமீதும் ஏறிநிற்போம்;
பூசனை செய்யும் அடியவரின் - உள்ளம்
      பொங்கு களிப்பெலாம் காட்டிநிற்போம். 4

மன்னருங் கண்டெதிர் வந்திடுவர் - கட்டி
     மார்போ டணைத்து மகிழ்ந்திடுவர்;
இந்நிலத் தின்பம் பெருகிடவே - நாங்கள்
     என்றும் உயிர்வாழ்ந் திருப்போமம்மா ! 5

25. சூரியகாந்தி

ஆகாய வீதி யுலாவி வருமிந்த
     ஆதித்த னேஉன தன்பனடி!
வேகாமல் வெந்து வெயிலில் உலர்ந்துநீ,
     விண்ணிலே கண்ணாக நிற்பதேனோ? 1