உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தை செல்வம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்சி இன்பம்

33


தீயில்லை, புகையும் இல்லை,
      தீவிரமாய்ச் சென்றிடும், பார்! 5

காலாலே மிதிப்பதனால்,
      கடும் விசையில் போயிடும், பார்! 6

ஒன்றன்பின் ஒன்றாக
      உருளும்பை தாக்களைப்[1] பார்! 6

அக்காளும் தங்கையும் போல்
     அவைபோகும் அழகைப் பார்!

30. ஆகாய விமானம்

கப்பல் என்றுமே - மெல்லக்
     கடலில் நீந்துவதாம்;
தப்பித் தப்பியே - ரயிலும்
     தரையில் ஊருவதாம். 1

வானமீ தெழுவேன் - அங்கே
      வட்டம் சுற்றிடுவேன்;
கானம் மலையெல்லாம் - யான் ஓர்
      கணத்தில் தாண்டிடுவேன். 2

இடைவிடாது தபால் - உலகில்
      எங்கும் கொண்டுசெல்வேன்;
சடைவி லாமலே - பலரைத்
      தாங்கியும் போவேன். 3

நன்மை செய்ய வந்தேன் - அதை
      நன்குண ராமல்,
வன்மைப் போரில்எனை - இழுத்து
      மாட்டி விட்டார், ஐயோ! 4


  1. 7. பைதா - சக்கரம்.