காட்சி இன்பம்
35
மாளிகைகள் உண்டு,
மடங்கள் பல உண்டு;
நான்கு மதில்கள் உண்டு,
நடுவிலொரு கோவிலுண்டு;
கோபுர வாசலுண்டு,
கொடிமரம் இரண்டுண்டு;
சித்திரையும் மார்கழியும்
திருவிழாக் காட்சி உண்டு;
பார்த்திடக் கண்கள்
பதினாயிரம் வேண்டும்;
தொன்னகரம் ஆன
சுசிந்தைச் சிறப்பெல்லாம்
என்னொரு நாவால்
எடுத்துரைக்க ஏலாதே.
32. கைத்திறன்
வெயில்வரினும் மழைவரினும் விரிகுடையாம் கையே;
வெயர்வைவரின் ஆற்றுசிறு விசிறியதாம் கையே
துயிலவொரு மகவைத்தொட்டில் இட்டசைக்கும் கையே;
துரிதமுடன் எழுதவொரு தூவிகொளும் கையே.
1
இனியசெந்நெற் புலம்உழுதற் கேர்பிடிக்கும் கையே;
இன்னிசைகள் எழுப்பவீணை ஏந்துமெழிற் கையே;
கனியுதிர்ப்பக் கல்லெறியும் கவண்பிடிக்கும் கையே ;
கண்களிப்பப் படமெழுதிக்காட்டும்என் றன்கையே.
2
தானதர்மம் செய்ய எதும் தளர்விலதாம் கையே;
தளர்பவரைக் கண்டுதலை தாங்கஎழும் கையே;
பானம்செய்தற் கேற்றவொரு பாத்திரமாம் கையே ;
பையரவைப் போலவந்து பயமுறுத்தும் கையே.
3