52
குழந்தைச் செல்வம்
வளர்ந்து வரும்வாலை வெட்டி வெட்டித் - தேய்ந்த
மாறுபோல் ஆக்கிக் குறைத்திடும் நீர்,
தளர்ந்த பொழுதெங்கள் ஈப்பகை ஓட்டிடத்
தக்க உதவிகள் செய்வதுண்டோ?
2
இரும்புக் கடிவாளம் மாட்டுவதேன்? - வாயை
ஈசன் படைத்த திதற்காமோ?
பெரும்புவி மீதினில் உங்களுக்கும் - இந்தப்
பேதைகள் செய்த பிழைகள் உண்டோ?
3
வெள்ளிப்பூண் கட்டிய சேணமிட்டால் - நெஞ்சு
வேதனை யில்லா திருந்திடுமோ?
அள்ளி யிடும்பிடிப் புல்லுக்காக-எங்கள்
ஆவியைக் கொள்வ தழகாமோ?
4
பக்கம் திரும்பியே பார்த்திடாமல் - எங்கள்
பார்வையைக் கட்டி மறைப்பதுமேன்?
திக்கெலாம் தந்த பிரமனிலும் - நீவிர்
தீவிர புத்தி உடையவரோ?
5
திண்ணய லாடமும் கட்டுவதேன்? - அதில்
தீயெழ எம்மையும் ஓட்டுவதேன்?
புண்ணியம் நீர்செய்ய வேண்டாமையா!-எம்மைப்
போக்கிலே விட்டிடில் போதுமையா!
6
வண்டியில் கொண்டெமை மாட்டுகின்றீர் - காலை
மாலையெல்லாம் தட்டி ஓட்டுகின்றீர்;
நொண்டினா லும்விட்டுப் போகமாட்டீர் - உடல்
நோவ அடித்து வெருட்டுகின்றீர்.
7
கால் இளைப் பாறியே நிற்கவொட்டீர் - வாயிற்
கௌவிய புல்லையும் தின்னவொட்டீர்;
மூலை முடுக்கென்றும் எண்ணமாட்டீர் - எம்மை
மூச்சு விடாமல் துரத்துவீரே.
8