உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தை செல்வம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பஞ்சாமிர்தம்

61


வீட்டுக்குள் சண்டைகள் போடுவதேன்? - கூரை
    வெந்து விழுவதும் கண்டிலிரோ?
நாட்டுக்கு நன்மையை நாடுபவர் - இந்த
    நாடகம் ஆடல் நகைப்பலவோ? 3

மன்னுயிர்க் காக முயல்பவரே - இந்த
    மாநிலத் தோங்கும் குலத்தினராம்;
தன்னுயிர் போற்றித்திரிபவரே - என்றும்
    தாழ்ந்த குலத்தில் பிறந்தோர், அம்மா! 4

55. வீரத்தாய்

[போர்முனைக்குச் செல்லும் தன் மகனை நோக்கி ஒரு வீரத்தாய் கூறுவது.]

தாயிற் சிறந்த தப்பா ! - பிறந்த
     தாய்நா டதுபேணார்
நாயிற் கடையரென - இந்த
     நானிலம் சொல்லும், அப்பா! 1

தாய்நிலம் காத்திடவே - ருஷியர்
     சாவும் மதித்திடாமல்
காய்சினப் போரதிலே - சென்று
     கலப்பதும் கண்டிலையோ? 2

நன்றுபுரி வதற்கே - உடலை
     நாமிங் கெடுத்தோம், அப்பா!
நின்று தெரிந்திடுவாய் - அதுதான்
     நீர்மேற் குமிழி, அப்பா! 3

கு—5