பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வட்டத்துக்கு வெளியே நின்றுகொண்டிருப்பவர், (கடிகாரம் சுற்றும் முறைக்கு எதிர்த் திசைபோல) இடது கைப்புறம் திரும்பி ஓடுகின்ற தன்மையில், வட்டத்தைச் சுற்றி வேகமாக வந்து, தன் இடத்தில் நிற்பதுடன், தன் வலது கைப்புறம் நிற்பவரையும் தொட்டுவிட்டு நிற்கவேண்டும்.

தொடப்பட்டவர் உடனே வட்டத்திற்கு வெளியே வந்து ஓடத் தொடங்கி, முன்னவர் போல், ஓடி வட்டத்தைச் சுற்றி ஓடி வந்து நிற்கும் பொழுது, தன் அருகில் உள்ளவரைத் தொட்டு ஆட்டத்தைத் தொடரச் செய்யவேண்டும்.

ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் வட்டத்தைச் சுற்றி முடிக்கின்ற வாய்ப்புக் கிடைத்து, அதில் முன்னுக்கு ஓடி முடிக்கின்ற குழுவே வெற்றி பெறுகிறது.

95. புதையல்

போட்டியில் பங்கு பெறுவோரை, ஓடத் தொடங்கும் கோட்டிற்குப் பின்னால் நிறுத்தியிருக்க வேண்டும்.

அவர்களுக்கு எதிரே 30 கெச தூரத்தில் தீக்குச்சிகளை (Matches) நிறையப் போட்டிருக்க வேண்டும்.

விசில் சப்தத்தின் மூலம் அவர்களை ஓடவிட்ட உடனே, தமக்கு எதிரே உள்ள தீக்குச்சிக் குவியலை நோக்கி ஓடி, குனிந்து, கீழே கிடக்கும் தீக்குச்சிகளை ஒவ்வொன்றாகப் பொறுக்கிச் சேர்க்கவேண்டும்.