பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்

127


தண்ணிர் வாளியில் குறைந்திருக்கலாம். அதற்கும் குறைந்துபோய், ஆட்டத்தில் முதலாவதாக வந்தாலும் வெற்றிபெற முடியாது விழிப்புடனும் பொறுப்புடனும் விளையாடினால்தான் வெற்றிபெற முடியும்.


100. தொடு பந்தாட்டம்

அமைப்பு: இரண்டு குழுக்களாக ஆட்டக்காரர் களைப் பிரிக்க வேண்டும்.

40 அடி விட்டம் இருப்பதுபோல ஒரு வட்டம் ஆட்டத்திற்கு வேண்டும்.

முதலில் ஒரு குழு ஆட்டக்காரர்களை வட்டத்திற்குள்ளே வரச் செய்து, அவர்களுக்கிடையே ஒரு பந்தைக் கொடுத்திருக்க வேண்டும்.

அடுத்த குழுவைச் சேர்ந்த இருவர், வட்டத்திற்குள் நுழைய, போட்டி ஆட்டம் தொடர்கிறது.

ஆடும் முறை: வட்டத்திற்குள் உள்ள குழுவினர் தங்களுக்குள்ளேயே அந்தப் பந்தை வழங்கியும் வாங்கியும் விளையாட வேண்டும். உள்ளே நுழைந்த இரண்டு எதிர்க் குழு ஆட்டக்காரர்கள் அவர்கள் விளையாடும் பந்தைத் தொட்டு விடவேண்டும்.

தொட்டுவிட்டால், 1 வெற்றி எண் கிடைக்கும். தொட்டவர் வட்டத்தைவிட்டு வெளியேற, அவரது