பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்

65


ஆடும் முறை:

தாய் வாத்துத் தன் குஞ்சினைக் காப்பாற்ற நரியையே பார்த்து தடுக்கும்போது, வரிசையிலுள்ள வாத்துக்களும் இப்படி அப்படியுமாக நகர்ந்து ஓடி, இணைப்பும் பிடிப்பும் தொடர்பும் அறுந்து போகாதவாறு ஓடித் தப்பிக்க வேண்டும்.

நரி கடைசி வாத்தைப் பிடித்து விட்டால் ஆட்டம் முடிவு பெறும்.

பிறகு, குழுவில் உள்ள மூன்று பேர்களைத் தேர்ந்தெடுத்து ஒருவரை நரியாகவும், அடுத்தவரை தாய் வாத்தாகவும், மூன்றாமவரை இளைய வாத்தாகவும் மாற்றி ஆடச் செய்யலாம்.

43. நடுக்கோட்டு ராஜா

அமைப்பு:

20 அடி நீளமும் 10 அடி அகலமும் இருப்பது போல, நீண்ட சதுரம் ஒன்றை ஆடுகளமாக அமைக்கவும். (ஆடுவோர் அதிகமாக இருந்தால், ஆடுகளத்தின் அளவை தேவையான வடிவத்திற்கு அமைத்துக் கொள்ளவும்)

பிறகு, அந்த நீண்ட சதுரத்தை இரண்டாகப் பிரிப்பதுபோல, மத்தியில் ஒரு கோட்டைப் போடவும்.

விளையாட இருப்பவர்களை இரண்டு குழுவாக பிரித்து இரண்டு கட்டங்களுக்குள்ளும் நிற்க செய்யவும்.