பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



61. கூடைக்குள்ளே கோலிக்குண்டு

ஒரு பிளாஸ்டிக் கூடையும், பத்து கோலிக் குண்டுகளும், இந்த விளையாட்டுக்குத் தேவையான பொருட்களாகும்.

அந்தக் கூடையை ஒரு இடத்தில் வைத்து, அதிலிருந்து 10 அடி தூரத்திற்கு அப்பால் ஒரு கோடு கிழித்து இடத்தைக் குறிப்பிடவும்.

ஒவ்வொருவரும் வந்து, 10 கோலிக் குண்டுகளை அந்தக் கூடைக்குள்ளே எறிய வேண்டும்.

அதிகமுறை கோலிக் குண்டுகளை அந்தக் கூடைக்குள் எறிந்தவரே ஆட்டத்தில் வெற்றி பெற்றவராவார்.


62. சொல் பார்க்கலாம்

அவரவருக்குரிய இடங்களில் அனைவரும் உட்கார வேண்டும். ஆசிரியர் அவர்களுக்கு முன்னே அமர்ந்திருக்க வேண்டும்.

ஆசிரியரின் கேள்விக்கு இப்பொழுது மாணவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

அவர் ஒருவரை அழைத்து நிற்கச் செய்து, நிலத்தில் வாழும் ஒரு மிருகத்தின் பெயரைச் சொல் என்பார்.

அதேபோல் மாறி மாறி கேள்விகளை மற்றவர்களிடமும் கேட்க வேண்டும்.