பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஆட்டமாகும் தொடர்ந்து தவறு செய்பவர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்படுவார்.

தோள் பாகத்தாலும், தோள் பக்கவாட்டிலும் தான் இடிக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.

வட்டத்தைக் குறிக்கும் கோட்டின் மேல் விழுந்தாலும் சரி, அல்லது வட்டத்திற்கு வெளியே விழுந்தாலும் சரி, அவர் போட்டியில் தோற்றார் என்று அறிவிக்கப்பெற்று, ஆட்டத்தைவிட்டு வெளியேற்றப்படுவார்.


73. மூன்று கால் ஒட்டம்

கால் பந்தாட்ட ஆட்டம் போலவே, இரு பக்கமும் இலக்குகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.

ஆட்டக்காரர்களை முதலில் இரு குழுக்களாகப் பிரித்து, அந்தந்தக் குழுவுக்குள்ளேயே, இரு இரு ஆட்டக்காரர்கள் சேர்ந்து, தங்களின் ஒவ்வொரு காலையும் கைக்குட்டையால் கட்டிக் கொள்ள வேண்டும்.

(இருவருடைய இடது காலும் வலது காலும் சேர்ந்து மூன்று கால் ஆகிறது)

இரட்டையர்கள் தோள்மேல் கைகளைப் போட்டுக் கொண்டு, ஒருவர் போலவே இணைந்து ஆடவேண்டும்.

இப்பொழுது, ஆட்டம் ஆரம்பமாகிறது. பந்தைக் கையால் தொடக்கூடாது யாரையும் தள்ளக் கூடாது. மிகஅருகிலே குறிக்கப் பெற்றிருக்கும் இலக்கை நோக்கிப் பந்தை உதைக்க வேண்டும்.