பக்கம்:கெடில வளம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கெடிலவளம் சுந்தரர்க்குச் சேர மன்னராகிய சேரமான் பெருமாள் நாயனர் சிறந்த நண்பரானர். சுந்தரர் திருவஞ்சைக்களம் என்னும் திருப்பதி போந்து திருக்கோயில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது, சிவனது கட்டளைப்படி தேவர்கள் வெள்ளையானை கொண்டுவந்து அதில் இவரை அமர்த்திக் கைலைக்கு அழைத்துச் சென்றதாகவும், அஃதறிந்த சேரமானும் குதிரைமீதமர்ந்து கந்தரருடன் ைகலே சேர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. - கத் தரச் பிறந்த மனை சுந்தரர் சுந்தரமூர்த்தி நாயனர் என்னும் சிறப்புப் பெயராலும், நம்பி ஆருரர் என்னும் பிள்ளைமைப் பெயராலும் அழைக்கப்படுவதல்லாமல், திருநாவலூரில் பிறந்து வளர்ந்த -வரானதால், திருநாவலூரார் என ஊர்ப் பெயராலும் வழங்கப் படுகின் ருர். இவர் பிறந்த மனை இஃது என இன்றும் திருநாவ லூரில் சுட்டிக் காட்டப்படுகின்றது. அந்த மனை, திருநாவலூர்க் கோயிலுக்கு வடபுறமாகப் பக்கத்திலேயே உள்ளது. கே.சயில் பூசனை புரியும் குருக்கள் மரபினர் கோயிலுக்குப் பக்கத்திலேயே வீடு அமைத்துக்கொண்டு இருப்பது வழக்கம். சுந்தரர் குருக்கள் மரபினராதலால், கோயிலுக்குப் பக்கத்தில் சுட்டிக் காட்டப்படும் அந்த மனையைச் சுந்தரர் பிறந்த மனையாகத் துணிந்து நம்பலாம். அந்த மனையில் சுந்தரர் நினைவாக இப்போது ஒரு கட்டடம் , கட்டப்பட்டு வருகின்றது. -- 3. இயற்கைச் குழ்நிலையில் அமைக்கப்படும் இந்தக் கட்டடம், ! -சுந்தரா நினைவை என்றென்றும் உலகிற்கு அறிவுறுத்திக்: கொண்டிருக்கும். கந்தசர்க்குத் திருநாவலூரில் இந்த நினைவு" . மாளிகை எழுப்பப்படுவதல்லாமல், பெரிய திருக்கோயிலுக்குள் ; அவருக்கென்று தனியாகச் சிறிய திருக்கோயில் ஒன்றும் எழுப்பப்து .பட்டுள்ளது. திருக்கோயிலில் உள்ள கந்தசசின் வார்ப்படத்து சிலை, சுந்தரர் என்னும் பெயருக்கு ஏற்ப மிகவும் அழகாகக்ஜ் கவர்ச்சியாக உள்ளது. கெடிலக்கரையில் பிறந்து வளர்ந்துத் தேவாரப் பாடல்கள் பல பாடித் தமிழையும் சமயத்தையும்; -வளப்படுத்திய கந்தரர் புகழ் நீடு வாழ்க ! . : عين கெடில நாட்டுப் பெருமக்கள் 75' 'திருதாவுக்கரசரும் சுந்தரரும் பிறந்ததால் திருமுனைப்பாடி நாடு நாடுகளுக்குள் மிகச் சிறந்ததாகும்; இதற்கு மேல் இந் நாட்டிற்கு இன்னும் என்ன பெருமை வேண்டும்? இஃதொன்றே போதும்’-எனச் சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறியுள்ள கருத்து ஈண்டு நினைவு கூரத்தக்கது. மெய்கண்ட தேவர் சத்தான குரவர் : 3. சைவ மதத்தில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்த மூர்த்தி, மானிக்க வாசகர் ஆகிய நால்வரையும் சமகச குரவர் நால்வர் அல்லது சமயாசாரியார் நால்வர் என அழைப்பது மரபு. அது போலவே, மெய்கண்டதேவர்,அருணந்தி சிவாசாரியார், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவாசாரியார் என்னும் தால்வரையும் சந்தான குரவர் நால்வர்' அல்லது 'சந்தானுசசரியார் கால்வர்' எனச் சைவர்கள் அழைப்பர். இந்தச் சந்தான குரவர் நால்வருமே தென்னுர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்; முன் இருவருமோ, முறையே கெடிலம் பாயும் திருக்கோவலூர் வட்டத்தையும் தட்லூர் வட்டத்தையும் சேர்ந்தவர்கள். இந் நால்வர்க்குள்ளும் முதல் ஆசான் மெய்கண்ட தேவர். மெய்கண்டார் எனவும் இவர் அழைக்கப் உடுவார். 2} - பிறப்பு : மெய்கண்டார், தடுதாடு எனப்படும் திருமுனைப்பண்டி , தாட்டிலுள்ள பெண்ணுகடம் என்னும் ஊரில் வேளாளர் மரபில் gఎrఇడా தோன்றினர். தந்தை பெயர் அச்சுத் களப்பாளர். இவர் தாய்மாமன் திருக்கோவலுரர் வட்டத்திலுள்ள திரு. வெண்ணெய் நல்லூருக்குக் குழந்தைப் பருவத்திலேயே ஆழைத்துச்சென்று வளர்த்து வந்தார். இவரது இளமைப் பெயர் 'கவேதனன்’ என்பது. ぶ * . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/43&oldid=810741" இலிருந்து மீள்விக்கப்பட்டது