பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40


பட்ைத்த அறிக்கையில், கத்தோலிக்கர்களின் பற்று இரு கூருனது. அவர்கள் தங்கள் அன்பைப் போப்பாண்ட வருக்கும், அடுத்தாற்போல் அமெரிக்க நாட்டிற்கும் செலுத்து கிருர்கள் ? என்று கூறினர். இதில் கத்தோலிக்கர்கள் அமெரிக்க நாட்டைவிடப் போப்பாண்டவரையே மிகவும் விரும்புகின்றனர் என்ற குற்றச்சாட்டுக் காணப்படுகிறது.

நீங்கள் கூறுவதை என்னல் ஏற்றுக் கொள்ள முடியாது. உங்கள் கூற்றுத் தவருனது என்பதற்கு உயிருள்ள எடுத்துக்காட்டாக நான் விளங்குகிறேன். கத்தோலிக்கச் சமயக் கொள்கைகளை விளக்கி நான் இங்குச் சொற்போர் செய்ய விரும்பவில்லே. ஆல்ை தவறன செய்திகளை நீங்கள் பேசக்கூடாது. அமெரிக்காவிலுள்ள கத்தோலிக்கர்கள் போப்பாண்டவரின் சட்டபூர்வமான குடிமக்கள் என்ரு கூறுகிறீர்கள்? நான் திட்டவட்டமாகக் கூறுகிறேன். நான் போப்பாண்டவரின் சட்டபூர்வமான குடிமகன் அல்லன் ’ என்று விடையிறுத்தார் கென்னடி, சமயப்பற்றுள்ள ஒவ்வொரு கத்தோலிக்கருக்கும் இரட்டை விசுவாசம் உண்டு ’ என்று ரோஜர்ஸ் மீண்டும் கூறினர்.

  • பாஸ்டனில் ஒரு பழமொழி உண்டு. எங்களுடைய சமயம் உரோமாபுரியிலிருந்து பெறப்படுவது; ஆல்ை எங்கள் அரசியல் உள்ளுரிலிருந்து பெறப்படுவது என்று கத்தோலிக் கர்கள் கூறுவார்கள். இப்பழமொழியை நண்பர் ரோஜர்ஸ் அவர்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன் ’ என்று கென்னடி கூறினர்.

சட்டம்ன்ற உறுப்பினராகப் பதவி ஏற்றதிலிருந்து ஐந்தாண்டுகளுக்குள் கென்னடி அரசியல் உலகில் தமக்கென ஒரு நிலையான இடம் பிடித்து விட்டார். மன்றத்தில் வீற்றி ருந்த உறுப்பினர்களுக்கு இவரை மிகவும் பிடித்துவிட்டது. இவருடைய இளமையும், அரசியற் பிடிப்பும், ஐயத்திற்